news Breaking News
clock

உன்மகன் வந்திருக்கேன்

உன்மகன் வந்திருக்கேன்


---------------------------------


அம்மா என்னும் பெரும் ஆயுதம் 

உலகையாள என்னை படைத்த பெரும் பேராயுதம்....!


பள்ளியிலே என்னை படிக்க வைக்க பட்டினியாய் நீ இருந்த...!


கல்லூரியிலே என்னை படிக்க வைக்க காடு, கழனியிலே கஸ்ட்டப்பட்ட...!


தரணி போற்றனுமுனு

உன் தாலிய கூட விற்று செலவலிச்ச....!


பட்டங்கள் பல நான் பெற்று வீடு திரும்பு முன்னே

 பாடையிலே படுத்திருக்க...!


செல்லமா வளர்த்த மகன் 

சிதைஞ்சி போயிருக்கேன்

செவி சாய்ச்சி கேட்காம நீ சிலையாய் படுத்திருக்க...!


உன் முகம் பாராம எப்படிதான் வாழுவேனோ

இல்லை உன் கூட உடன் கட்டை...

 தான் ஏறுவேனோ....!


அம்மா என்னை அனைத்துக்கொண்டு

உன்னோடு சென்று விடு....!


இல்லைனா எழுந்து என்னோடு வாழ வந்து விடு....!


உன்னை விட்டு வாழ எனக்கு பிடிக்க வில்லை

நீ இல்லாத இந்த உலகம் 

எனக்கு தேவையில்லை...!


அம்மா கண் திறந்து பாரம்மா...உன்

செல்ல மகன் வந்திருக்கேன்....

சிதைஞ்சி போய் நின்னுயிருக்கேன்....!

அம்மா.....அம்மா...!!


பொன்.கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News