உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது. இந்தியா 75வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.


லண்டனைச் சேர்ந்த 'ஹென்லி அண்டு பார்ட்னர்ஸ்' என்ற நிறுவனம், சர்வதேச பயணம் தொடர்பான ஆய்வுகளை செய்து வருகிறது. விமான நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து, விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு செல்ல எந்த பாஸ்போர்ட் உதவும் என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளது. உலகில் 227 நாடுகளின் அனுமதியைக் கணக்கிட்டு, 2026ம் ஆண்டுக்கான பட்டியலை அந்நிறுவனம் தரவரிசைப் பட்டியலை தயாரித்துள்ளது.


அதில் சிங்கப்பூர் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது. 85வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 75வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இப்போது விசா இல்லாமல் 56 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.


விசா இல்லாமல் பயணியக் கூடிய நாடுகளில் மலேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தோனேசியா, பூடான், மாலத்தீவு, கென்யா, பார்படாஸ், பூட்டான், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், புருண்டி, கம்போடியா, கேப் வெர்டே தீவுகள், கொமோரோ தீவுகள், குக் தீவுகள், டொமினிகா, எத்தியோப்பியா, பிஜி, ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கென்யா, லாவோஸ், மக்காவோ, மடகாஸ்கர், மாலத்தீவுகள், மார்ஷல் தீவுகள், மொரீஷியஸ், மங்கோலியா, மொசாம்பிக், மியான்மர், நேபாளம், நியு பலாவ் தீவுகள், பிலிப்பைன்ஸ், ருவாண்டா, சமோவா, செனகல், சீஷெல்ஸ், தான்சானியா, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகள் அடங்கும். ஆனால் 170 இடங்களுக்கு பயணம் செய்ய விசா அவசியமாகும்.


உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் நாடுகள் வரிசையில் முதலிடத்தை சிங்கப்பூர் தக்க வைத்து கொண்டுள்ளது. 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.


2வது இடத்தில் உள்ள ஜப்பான், தென் கொரியா பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.


3வது இடத்தில் உள்ள ஸ்வீடன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாஸ்போர்ட் வைத்திருப்போர் 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.


பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, நார்வே ஆகியவை 4வது இடத்தில் உள்ளது. இங்கிருந்து 185 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். 5வது இடத்தில் உள்ள ஆஸ்திரியா, கிரீஸ், மால்டா, போர்ச்சுகல் ஆகியவை 184 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். 6 வது இடத்தில் நியூசிலாந்து, 7வது இடத்தில் ஆஸ்திரேலியா, 8–வது இடத்தில் கனடா-, 9வது இடத்தில் மலேசியா, 10வது இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 179 நாடுகளுக்கு செல்ல முடியும்.


இந்தியாவின் அண்டை நாடுகளில், மாலத்தீவு 49வது இடத்திலும், சீனா 56வது இடத்திலும் உள்ளது. இலங்கை, வங்காளதேசம் மற்றும் நேபாளம் முறையே 91வது, 93வது மற்றும் 95வது இடங்களில் உள்ளன. மிகக் குறைந்த நிலையைப் பெற்றவை பாகிஸ்தான் (97வது இடம்) மற்றும் ஆப்கானிஸ்தான் (101வது இடம்) ஆகும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%