டி-20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் மே.இ. தீவுகள் ; வெளியேறியது நேபாளம்
இந்தியா - இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் - நேபாளம் (குரூப் சி) அணிகள் மோதின. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை யில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. நேபாளம் அணி சார்பில் திபேந்திர சிங் 58 ரன்கள் எடுத்தார். மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் அதிகபட்சமாக ஹோல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங் கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஹோப் (61 ரன்கள்), ஹெட்மேயர் (46 ரன்கள்) ஆகியோரின் நிதான அதிரடி யால், 9 விக்கெட் வித்தியாசத்தில் (15.2 ஓவர்கள் : 134-1) அபார வெற்றி பெற் றது. இந்த வெற்றியின் மூலம் மேற்கு இந்தியத் தீவுகள் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. நேபாளம் அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது. முன்னதாக ஓமன் அணி உலகக்கோப்பையில் இருந்து முதல் அணியாக வெளியேறி யது என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?