news Breaking News
clock

குளிர்கால ஒலிம்பிக் 2026 : தொடக்கத்திலேயே அதிக காயங்கள்

குளிர்கால ஒலிம்பிக் 2026 : தொடக்கத்திலேயே அதிக காயங்கள்


25ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலி நாட்டின் மிலன், கார்டினா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தொடக்கத்தி லேயே அதிக காயங்கள் ஏற்பட்டுள் ளன. அதிவேக பனிச்சறுக்கு விளை யாட்டு பிரிவான ஆல்ப்பைன் ஸ்கீயிங், ஐஸ் ஹாக்கி உள்ளிட்ட போட்டி களில் காயங்கள் காரணங்கள் கார ணமாக வீரர் - வீராங்கனைகள் விலகி யுள்ளனர். லிண்ட்சே வான் என்ற 41 வயது அமெரிக்க வீராங்கனை மகளிர் ‘டவுன்ஹில்’ போட்டியில் பலத்த காய மடைந்தார். ஏற்கெனவே முழங்கால் காயத்துடன் பங்கேற்ற அவர், இப்போட்டியின் போது இடது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டு தொட ரில் இருந்து விலகி, மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 16 வயது இளம் உள்ளூர் வீராங் கனையான (இத்தாலி) ஜியாடா டி ஆண்டோனியோ பயிற்சிக் களத்தில் ஏற்பட்ட விபத்தில் முழங்கால் காயத் தால் தொடரில் இருந்தே விலகியுள் ளார். அதே போல இத்தாலியின் நட்சத்திர வீராங்கனையான மார்க்டா பாசினோ (29 வயது) பனிச்சறுக்குப் பிரிவில் ஏற்பட்ட கால் எலும்பு முறிவு காரணமாக ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேறினார். ஐஸ் ஹாக்கியில் கனடா அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சுவிட்சர் லாந்து வீரர் கெவின் பியாலா பலத்த காயம் காரணமாக மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சர் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் ஆல்ப்பைன் ஸ்கீயிங் நடைபெறும் கோர்டினா டி’அம்பெசோ தளம் பதற்றமாக காணப்படுகிறது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News