ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 உலக குடை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
குடை கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் உள்ளது. முதலில் மேற்கு ஆசியாவில் உள்ள வரலாற்று புகழ் வாய்ந்த மெசபடோமியா பகுதியில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் இது பனை இலையைக் கொண்டும் பாப்பிரஸ் மற்றும் மயில் இறகினாலும் செய்யப்பட்டது. சைனாவில் மூங்கில்களை குச்சியாக்கி, அதன் மேல் இலைகளையும் , இறகினாலும் மறைக்கப்பட்டு, பயன்படுத்தி வந்தார்கள். பிரஞ்ச் மொழியில் parapluie என்றால் குடை என்று பெயர். அதாவது, para என்றால் பாதுகாப்பு என்று பொருள் . ஈரோப்பில் கருங்காலி மற்றும் கரும்புகளில் அழகாக செதுக்கியும் குடைகளை உபயோகப்படுத்தி வந்தனர்.
குடை அதிகமாக எகிப்து, கிரீஸ் மற்றும் சீனாவில் தான் அதிகமாக புழக்கத்தில் இருந்தது. அவர்கள் மழை மற்றும் வெயில்களிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக பயன்படுத்தினர்.
இந்தியாவில் குடை பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக, நம் முன்னோரகள், கோணிகளையும், அடர்த்தி மிகுந்த துணிகளை பயன்படுத்தினர். பின்னர் நாகரீகம் மாற மாற இந்தியாவில் குடை பயன்பாட்டிற்கு வந்தது. பின்னர் குடை அந்தஸ்தின் அடையாளாமாகக்கருதப்பட்டது. பேருந்து மற்றும் போக்குவரத்து அதிகம் பயன்படுத்தாத நாட்களில் மக்கள் தங்களின் நீண்ட பயணத்திற்கு பாதுகாப்பாக குடைகளை பயன்படுத்தி வந்தனர்.
19 நூற்றாண்டில், நவீன குடைகள் கண்டுப்பிடிக்கப்பட்டன. அதன் பிறகு குடைகளில் பலவகை வகைகள் வடிவமக்கப்பட்டன. சிறிய மடக்கு குடை , மரத்துண்டுகளான நீண்ட பெரிய குடை என்றும், பல வண்ணங்களிலும் வடிவமக்கப்பட்டன. குழந்தைகளை கவரும் வகையில் சிறிய, வண்ணங்களைக் கொண்டு அழகிய வேலைப்பாட்டுடன் கூடியதாக குடைகள் தற்பொழுது சந்தைப்படுத்தப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, குடைகள் பலதரப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய பல்துறை மற்றும் நடைமுறைக் கருவிகள், அவை பலருக்கு இன்றியமையாத பொருளாக இருக்கிறது.
சர்வதேச குடை நாளான இன்று நாம் ஒரு குடையை வாங்கி தேவையுள்ளவர்க்கு பரிசாகதரலாமே.

தொகுப்பு: பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?