வாடிப்பட்டி, பிப்.10-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணிகள்துறை சார்பாக தனியார் பாதுகாவலர்களுக்கு தீயணைப்பு அடிப்படை பயிற்சி தீயணைப்பு நிலையத்தில் நடந்தது. இந்த பயிற்சிக்கு நிலைய அதிகாரி பாலசந்திரன் தலைமை தாங்கி தொழிற்சாலைகள், மருத்துவமனைகள்,வணிக வளாகங்கள், கல்லூரி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும்போது அங்கே பணிபுரியும் பாதுகாவலர்கள் உடனடியாக தீயணைப்பு பணியில் ஈடுபட்டு அதிக அளவில் பொருள் சேதம் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பது சம்பந்தமாக விரைந்து எளிய முறையில் தீயணைக்கும் அடிப்படை பயிற்சியளித்தார். இதில் வாடிப்பட்டி பகுதி சேர்ந்த ஏராளமான தனியார் பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?