*21.12.2025 ஞாயிறு "உலக தியான தினத்தை" முன்னிட்டு ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், குளூர் ஊராட்சி, செங்கரைப்பாளையம் அறிவு திருக்கோவிலில் துரியாதீத தவம் பேராசிரியர் ஆர்.பாலமுருகன் அவர்களால் நடத்தப்பட்டது.*
*திருப்பூர், கூடுதல் மாவட்ட நீதிபதி மரியாதைக்குரிய திரு டி.பாலு அவர்கள் மனவளக்கலை அன்பர்களிடையே "குடும்பம் ஒரு கோவில்" என்ற தலைப்பில் யதர்த்தமான முறையில், வேதாத்ரியக் கருத்துக்களை தெளிவாக விளக்கி, சிறப்பு சிந்தனை விருந்தை வழங்கினார்.*
*நிகழ்வில் அறக்கட்டளை தலைவர் வி.பொன்னுசாமி அவர்கள் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.கிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அறங்காவலர் சி.கதிர்வேல் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார். பொருளாளர் சி.மனோகரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். முன்னதாக மனவளக்கலை அன்பர் எம்.மணி அவர்களும், அறங்காவலர் ஜி.செல்வராஜ் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். ஆண்கள் பெண்கள் என இருபால் அன்பர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். "உலகநல வாழ்த்துடன்" விழா இனிதே நிறைவுற்றது*
*வாழ்க வளமுடன்*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?