ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மகளை கொன்ற தந்தை கைது - மகா​ராஷ்டிர அதிர்ச்சி

ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மகளை கொன்ற தந்தை கைது - மகா​ராஷ்டிர அதிர்ச்சி


 

ஹைத​ரா​பாத்: தெலங்​கானா மாநிலம், நிஜா​மா​பாத் மாவட்​டம், ஏஆர்பி கேம்ப் கால்​வா​யில் கடந்த ஜனவரி 29ம் தேதி அடை​யாளம் தெரி​யாத 6 வயது சிறுமி​யின் உடல் கரை ஒதுங்​கியது. எடபல்லி போலீ​ஸார் அந்த சிறுமி​யின் உடலை கைப்​பற்​றி பிரேதப் பரிசோதனைக்​காக நிஜா​மா​பாத் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி ​வைத்​தனர்.


அதன் பின்​னர், அந்த சிறுமி​யின் புகைப்​படத்தை பல ஊர்​களுக்கு அனுப்​பியதோடு, பல ஊர்​களில், காவல் நிலை​யங்​களில் போஸ்டர் அடித்​தும் ஒட்​டினர். இந்​நிலை​யில், கடந்த 2 நாட்​களுக்கு முன்​னர், எடபல்லி போலீஸ் நிலை​யத்​தில் கான்​ஸ்​டபிளாக பணியாற்​றும் சுதீர் என்​பவருக்​கு, மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள அவரது உறவினர்​கள் போன் செய்​தனர்.


அப்​போது அவர்​கள், இறந்து போன சிறுமி​யின் விவரங்​களை எடுத்​துக்​ கூறி​னார். இதனை தொடர்ந்து நிஜா​மா​பாத் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை தொடங்​கினர். அந்த விசாரணை​யில் பல திடுக்​கிடும் உண்​மை​கள் வெளி வந்​துள்​ளன.


மகா​ராஷ்டிர மாநிலத்​தில் சமீபத்​தில் உள்​ளாட்சி தேர்​தல் நடந்து முடிந்​தது. இதில் கேரூர் பகு​தியை சேர்ந்த பாண்​டுரங்கா என்பவரும் ஊராட்சி மன்ற தலை​வ​ராக போட்​டி​யிட ஆசைப்பட்டார். ஆனால், அவருக்கு 2 மகள்​கள், ஒரு மகன் உள்ளது. 3 பிள்​ளை​களின் தகப்​பன் என்​ப​தால் தேர்​தல் விதிமுறைகளின்​படி போட்​டி​யிட முடி​யாது என தானே தீர்​மானம் செய்​து, மூத்த மகளான பிராச்​சியை (6) கொலை செய்து விடு​வது என தீர்​மானித்​தார்.


அதன்​படி, கடந்த மாதம் மகள் பிராச்​சியை தனது பைக்​கில் உட்கார வைத்துக் கொண்​டு, சுமார் 60 கி.மீ. தூரத்​தில் உள்ள தெலங்​கானா மாநிலம், நிஜா​மா​பாத் மாவட்​டத்​துக்கு வந்​தார். அங்கு ஏஆர்பி கேம்ப் கால்​வா​யில் மகளை அடித்து தூக்கி போட்டுவிட்டு அதே பைக்​கில் மீண்​டும் தனது ஊருக்கு சென்று விட்​டார்.


காயம் காரண​மாக பிராச்சி கால்​வா​யில் அடித்துச் செல்லப்​பட்டு உயி​ரிழந்​தார். அவரது சடலம் சமீபத்​தில் கரை ஒதுங்​கியது. இதையடுத்து பிராச்​சி​யின் தந்​தை பாண்டுரங்காவை கைது செய்​து வி​சா​ரித்​து வருகின்​றனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%