எரிபொருள் ஸ்விட்சில் மீண்டும் பிரச்சினை: போயிங் 787 விமானங்களை ஆய்வு செய்கிறது ஏர் இந்தியா

எரிபொருள் ஸ்விட்சில் மீண்டும் பிரச்சினை: போயிங் 787 விமானங்களை ஆய்வு செய்கிறது ஏர் இந்தியா


புதுடெல்லி: ஏர் இந்​தியா நிறு​வனம் தனது போயிங் 787 ட்ரீம் லைனர் விமானங்​களின் எரிபொருள் கட்​டுப்​பாட்டு ஸ்விட்​சுகளை தீவிர சோதனைக்கு உட்​படுத்தி வரு​கிறது. அகம​தா​பாத் விமான விபத்​துக்கு பிறகு இரண்​டாவது முறை​யாக இந்த சோதனை மேற்கொள்​ளப்​படு​கிறது.


கடந்த 2025 ஜூன் 12-ம் தேதி குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் இருந்து லண்​டன் நோக்கி புறப்​பட்ட ஏர் இந்​தியா போயிங் விமானம் அடுத்த சில நிமிடங்​களில் விபத்​துக்​குள்​ளானது. இதில் 260-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர்.


இந்த விபத்து தொடர்​பான முதற்​கட்ட விசா​ரணை​யில், அந்த விமானத்​தின் எரிபொருள் கட்​டுப்​பாட்டு சுவிட்ச் (எப்​சிஎஸ்) அணைக்​கப்​பட்ட நிலை​யில் இருந்​ததும் இதனால் எரிபொருள் சப்ளை நின்​றதுமே விபத்​துக்கு காரணம் என தெரிய​வந்​தது.


இதையடுத்து முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக ஏர் இந்​தியா நிறு​வனம் தனது அனைத்து போயிங் 787 விமானங்​களின் எரிபொருள் கட்​டுப்​பாட்டு ஸ்விட்​சுகளை தீவிர சோதனைக்கு உட்​படுத்​தி​யது. இந்​நிலை​யில் கடந்த திங்​கட்​கிழமை ஏர் இந்​தியா நிறு​வனத்​தின் போயிங் 787 டிரீம்​லைனர் விமானம் (ஏஐ-123) லண்​டனில் பெங்​களூரு வந்​தது.


இதன் பிறகு விமான இன்​ஜினை மீண்​டும் 'ஸ்​டார்ட்' செய்​த​போது எரிபொருள் கட்​டுப்​பாட்டு ஸ்விட்ச் தானாகவே 2 முறை ‘Run’ நிலை​யில் இருந்து ‘Cut-off’ நிலைக்கு மாறியது. இதையடுத்து ஸ்விட்ச் செயல்​பாட்​டில் கோளாறு இருப்​ப​தாக விமானி புகார் அளித்​ததை தொடர்ந்து அந்த விமானம் தற்​காலிகமாக பயன்​பாட்​டில் இருந்து நீக்​கப்​பட்​டது.


இந்​நிலை​யில் ஏர் இந்​தியா நிறு​வனம் கடந்த செவ்​வாய்க்​கிழமை முதல் தனது அனைத்து போயிங் 787 மற்​றும் 737 விமானங்​களின் எரிபொருள் கட்​டுப்​பாட்டு ஸ்விட்​சுகளை தீவிர சோதனைக்கு உட்​படுத்தி வரு​கிறது. மேலும் இந்த விவ​காரத்தை விமான உற்​பத்தி நிறு​வன​மான போ​யிங் நிறு​வனத்​திடம் ஏர் இந்​தியா நிறு​வனம் கொண்​டு சென்​றுள்​ள​தாக தகவல்​கள்​ தெரி​விக்​கின்​றன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%