ஊழல் பற்றி பேசும் விஜய் தனது ஊதியத்தை வெளிப்படுத்துவாரா? அமைச்சர் கேள்வி
சென்னை, பிப்.
- ஊழல் பற்றி பேசும் நடிகர் விஜய், தான் வாங்கும் ஊதி யத்தை வெளிப்படையாக அறிவிப்பாரா என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். வருமானத்தை மறைத்ததால் அபராதம் விதிக்கப் பட்டுள்ள நிலையில் ஊழல் பற்றி பேச விஜய்க்கு தகுதி இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தவறு செய்த வர்கள் அனைவரும் விஜய்யுடன் உள்ளனர். இவர்கள் நாட்டை ஆண்டால் எப்படி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வரி ஏய்ப்பு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள நிலையில், விஜய் ஊழலை ஒழிப்பார் என்று எப்படி கூற முடியும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுள்ளார். கி.வீரமணி இந்நிலையில், திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி, ஊழல் குறித்துப் பேச விஜய்க்கு எந்தத் தகுதியும் கிடையாது என்றும், எந்தவொரு கொள்கையும் இல்லாமல் அரசியல் ஷூட்டிங் நடத்தி வருகிறார் என்றும் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?