கர்ப்பிணியான சிறுமி: போக்சோ வழக்குப் பதிவு

கர்ப்பிணியான சிறுமி: போக்சோ வழக்குப் பதிவு



திருவில்லிபுத்தூர், பிப்.

திருமணம் செய்து சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளை ஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விரிவாக்க அலுவலராக பணிபுரிந்து வரும் ஜானகி என்பவ ருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திருவில்லி புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டிருந்த சிறுமியிடம் பிப்.5 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வ.புதுப்பட்டியைச் சேர்ந்த அந்த சிறுமி, அதே ஊரைச் சேர்ந்த தனது அத்தை மகன் தங்கேஸ்வரனு டன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது காதலாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார். இருவரின் வீட்டாரும் இதற்கு சம்மதிக்காத நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக குடித்தனம் நடத்தி வந்ததாக வும், தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமி சிகிச்சைக்காக திருவில்லி புத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தபோது கிடைத்த தகவலின் அடிப்படையில், விரிவாக்க அலு வலர் ஜானகி அளித்த புகாரின் பேரில், சிறுமியை திரு மணம் செய்து கர்ப்பிணியாக்கிய தங்கேஸ்வரன் மீது திரு வில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%