எனை நனைத்த மழை !

எனை நனைத்த மழை !

கவிஞர் இரா .இரவி !


வானில் இருந்து வரும் திரவ அமுதம் மழை ! 

வயல்களைக் குளிர்வித்து விளைவிக்கும் மழை ! 


துளித்துளியாக விழும் பெருவெள்ளம் மழை ! 

துன்பம் மறக்க வைத்து இன்பம் தரும் மழை ! 


கடலிலிருந்துப் பயணித்து மேகமாகும் மழை ! 

கனிந்து மண்ணிற்கு வந்து விழும் மழை ! 


வருடம் தோறும் சீராகப் பெய்ய வேண்டும் மழை ! 

வளங்கள் பெரும் வளர்ச்சிப் பெருக்கும் மழை ! 


மயில்கள் தொகை விரித்து ஆடினால் மழை ! 

மண் செழிக்கும் மகசூல் பெருக்கும் மழை ! 


வருமுன்னே ஆராய்ந்து சொல்கின்றனர் மழை ! 

வஞ்சியர்கள் விரும்பி மகிழ்ந்திடும் மழை ! 


அளவோடு பெய்தால் நலமாக வாழவைக்கும் மழை ! 

அளவின்றிப் பெய்தால் இன்னல் தரும் மழை ! 


புவி வெப்பமயமாதலைத் தடுத்திடும் மழை !  

புவியின் விளைச்சலை வளர்த்திடும் மழை ! 


காதலர்களின் ஊடல் தீர்த்து வைக்கும் மழை ! 

காதலர்களின் கூடல் இணைத்து வைக்கும் மழை ! 


ஓரமாக ஒதுங்கி நின்ற எனை நனைத்தது மழை ! 

உடன் இறங்கி மழையில் நனைந்து மகிழ்ந்தேன் !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%