news Breaking News
clock

பிரார்த்தனை

பிரார்த்தனை



  " பிரார்த்தனை என்பது

    மகத்தானது

    அதுவும் பிறர்

    வாழ பிரார்த்திப்பது

    உயர்ந்தது ..."


    ஒரு மனிதன்

    உயிர் பிழைக்க

    உயிர் வாழ

    கோடி பேர்

    பிரார்த்தனை

    செய்வது என்பது

    உயர்ந்தது மகத்தானது .... "


   ஒன்று கூடி

   ஒரு மனதாக

   பிரார்த்தனை செய்வது

   பலவகை நன்மைகளை

   தரக் கூடியது ..."


   மனிதனுக்கு

   இறைவன்

   கொடுத்த

   வரப்பிரசாதம்

   பிரார்த்தனை .... "


    ஏழ்மையில்

    பிரார்த்தனை செய்

    பணம் வந்ததும்

    பரிகாரம் செய் ..."


    மனம் உருக

    மெளனமாய்

    வேண்டுவதில் தான்

    ஆயிரம் ஆயிரம்

     சுகம் உண்டு ..."


     கேட்பவர் மனம்

     உணரும் வகையில்

     பணிவு பக்தி

     கொண்டு கையேந்தி

     நின்றால் பலனும்

     கை நிறைய உண்டு ..."


  - சீர்காழி. ஆர். சீதாராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News