எளிய பரிகாரங்கள்!அரிய பலன்கள் !!

எளிய பரிகாரங்கள்!அரிய பலன்கள் !!


*மிகக்கொடிய கடன் தொல்லைகளுக்கு.*

*ஸ்ரீ யோக நரசிம்மரை வழிபடுவதும் மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடுவதும் மிக சிறந்த பரிகாரமாகும்.*


*ஹோமங்களில் சிறப்பு வாய்ந்தது மிருத்யுஞ்ஜயஹோமம்.*


*சிவாலயங்களில் ஈசான்ய பகுதியில் வீற்றிருக்கும் காலபைரவரை ஞாயிற்றுக்கிழமை* *மாலை 4.30 முதல் 6.00.மணி ராகு காலத்தில் வழி்பட்டு மிருத்யுஞ்ஜ ஹோமம் நடத்துவதால் நோய்,மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம்..*


*குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்படும் போதும் உடனடியாக அருகிலுள்ள*

*ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பது அந்த விநாடியே கஷ்டங்கள் குறைவதற்கு மகரிஷிகள் கூறிய ரகசிய பரிகாரமாகும்.*


*வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மாப்பொடியால் அபிசேகம் செய்தால் செல்வ வளம் பெருகும்.கடன் தொல்லைகள் அகலும்.*


*வெள்ளெருக்கு விநாயகரை விட்டு அறைகளில் உயரத்தில் வைக்க வீட்டில் ஏதும் பூத கண சேஷ்டைகள் இருந்தால் விலகி விடும்.*


*சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி தினமும் 12 முறை சுற்றி 48 நாட்கள் வழிபட தொழில்,வழக்கு சாதகமாகும்.*

*21 செவ்வாய்க்கிழமை நெய்தீபம் ஏற்றிவர பில்லி சூன்யம் விலகும்.*


*இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல உள்ள நாகராஜ சிலைக்கு வெள்ளிக்கிழமை*  

*காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்கு ராகு காலத்தில் அபிசேகம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளி பூக்கள் சாற்றி நெய்தீபம் ஏற்றி தம்பதியினர் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதியினர் ஓற்றுமையுடன் அன்னியோன்யமாக வாழ்வார்கள்.*


*பித்ரு தோசம் உள்ளவர்கள் தொடர்ந்து அமாவாசைக்காலங்களில் நெய்தீபம் ஏற்றி பெருமாளை சேவிக்க பித்ரு தோசம் விலகும்.*


*வெள்ளிக்கிழமை நவக்கிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு நெய்தீபம் எற்றி வழிபட கணவன் மனைவி கருத்துவேறுபாடு நீங்கும்.*


*திங்கள் கிழமை காலை 6.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள் நந்திக்கு ஜோடி அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வர குடும்பத்தில் அமைதி பிறக்கும்.*


 

*ஏழரை சனி,அஷ்டமத்து சனி நடப்பவர்கள் தீய பலன்களை குறைய திங்கட்கிழமை சிவபெருமானுக்குப் பால் அபிசேகம் செய்து வழிபட கெடுபலன்கள் நீங்கும் என வேத சாஸ்திரத்தில்சொல்லபட்டுள்ளது.*


*சனிபகவான் சன்னதியில் தேங்காய் உடைத்து இரண்டு முடியிலும் நல்லெண்ணெய்யில் தீபம் போடுவது சக்தி வாய்ந்த பரிகாரமாகும்.*


*சிவன்கோவிலில் அமைந்துள்ள வன்னிமரம்,வில்வமரத்தினை 21 முறை வலம் வந்து நமது குறைகளை கூற உடனடியாக பலன் கிடைக்கும்.*


*ஹஸ்தம் நட்சத்திரம் வரும் நாளில் துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி வாங்கி சாற்றி* 

*27 எலுமிச்சை கனி மாலை சாற்றி,சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து துர்க்கையை குங்குமம் வைத்து அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடக்கும்.*


*விழுப்புரம் அருகே சிங்கிரி கோவில்,பூவரசங்குப்பம்,பரிக்கல்,ஓரே நேர்கோட்டில் அமைந்த இம்மூன்று நரசிம்மர்களை ஓரே நாளில் தரிசித்தால் தீராத பணகஷ்டமும் கடனும் தீரும்,*


*புத்திர பாக்கியமில்லாத தம்பதியினர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.*


*கலியுகத்தில் காரியசித்திக்கு துர்க்கையை இராகு காலங்களில் வழிபட காரியசித்தி உண்டாகும்.*


*மதுரை ராமநாதபுரம் சாலையில் உள்ள இடைகாட்டூர் ஸ்தலத்தில் நவகிரகங்கள் முதன் முதலில் இந்த பூமிக்கு வந்ததால் இங்கு வந்து வழிபட்டால் நவகிரக தோஷம்நீங்கும்.*


*ராமேஸ்வர ஆலயத்தில் இருப்பவை 22 தீர்த்தங்கள்.*


*இவை எல்லாவற்றிலும் தீர்த்தமாட இயலாதவர்கள்,கடல்நீரின் பகுதியாக இருக்கும் அக்னி தீர்த்தத்திலும்,ஸ்ரீ ராமன் உருவாக்கிய கோடி தீர்த்தத்திலும் நீராடினால் பாவங்கள் அகலும்.*


*சிவன் கோவிலில் காலபைரவரையும்,விஷ்ணு கோயிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோசம் விலகும்.*


*ஆயிரமாயிரம் தேவதைகள் உறைந்து அருள்பாலிக்கும் கோமுக அபிசேக தீர்த்தத்தை விசாக நட்சத்திரம் வரும் நாளில் தங்கள் வியாபார தலங்களில் தெளித்து வர வியாபார விருத்தி ஏற்படும்.*


*பிரதோச காலத்தில் ரிஷபாரூட மூர்த்தியான மகேசனை தேவியுடன் வழிபடுவோர் ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்த பலனடைவார்கள்.*


*குறிப்பாக ஈசான்ய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையைக் கண்டால் எல்லா நோய்களும் வறுமையும் நீங்கும்.*


*மாதா மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்ய விரைவில் திருமணம் நடைபெறும்.*


*ஓவ்வொரு மாதமும் வரும் மகம் நட்சத்திரத்தன்று அகத்தியரிடம் ஆசி பெற்ற அகத்திய கீரையை எமதர்மனின் வாகனமான எருமை மாடுகளுக்கு கொடுத்து வழிபட மரண பயம் நீங்கும்.*


 

*பஞ்சகவ்யகலவையை:*

*(பால்,தயிர்,நெய்,கோமூத்திரம்.,சாணம்,)வாரம் ஓரு முறை தெளிக்க தீட்டு தோசம்,நிக்கி லட்சுமி கடாட்சம் கிட்டும்.*


*நூறு வருஷம் வாழ நினைப்பவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்து அதற்குரிய மந்திரங்களை சொல்லி வர நூறு வருஷம் வாழ வாய்ப்புண்டு.*


Balachandar

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%