எழும்பூரில் பராமரிப்பு பணி: 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்!

எழும்பூரில் பராமரிப்பு பணி: 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்!


எழும்பூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு


எழும்பூா் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11 ஆவது நடைமேடைகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக, பயணிகளின் வசதிகளுக்காக 8 ரயில்கள் மாம்பலம் நிலையத்தில் கூடுதலாக நின்றுச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நாளை(பிப். 22) முதல் ஏப்ரல் 6 வரை, 8 ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்றுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் அதிவிரைவு ரயில்


சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்


சென்னை எழும்பூர் - புதுச்சேரி விரைவு ரயில்


சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில்


சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு ரயில்


சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் அதிவிரைவு ரயில்


சென்னை எழும்பூர் - மன்னார்குடி விரைவு ரயில்


சென்னை எழும்பூர் - சேலம் அதிவிரைவு ரயில்


இந்த 8 அதிவிரைவு/விரைவு ரயில்கள் நாளை(பிப். 22) முதல் ஏப்ரல் 6 வரை கூடுதலாக மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லவுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%