news Breaking News
clock

இடைக்கால பட்ஜெட் விவாதம்: அதிமுக, பாஜக புறக்கணிப்பு!

இடைக்கால பட்ஜெட் விவாதம்: அதிமுக, பாஜக புறக்கணிப்பு!



தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இறுதிநாள் கூட்டம் வெள்ளிக்கிழமை பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் 2026-27 ஆம் ஆண்டின் முன்பண மானிய கோரிக்கைகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இடைக்கால பொது நிதிநிலை அறிக்கை மற்றும் இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்க ளுக்கு முறையே நிதியமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் பதிலுரையாற்றினர். 2025-26 நிதியாண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மற்றும் 2026-27 ஆண்டின் முன்பண மானிய கோரிக்கைகள் விவாதமின்றி வாக்கெடுப்பில் நிறை வேற்றப்பட்டன. எனினும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர் கள் அனைவரும் அன்றைய அவை நடவடிக்கைகளை ஒட்டு மொத்தமாக புறக்கணித்தனர். அவர்களுக்கு ஆதரவாக பாஜக மற்றும் பாமக அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்களும் சபை நடவடிக்கைகளை முழுமையாக புறக்கணித்தனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏவான அய்யப்பன், பாமக ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் ஜி.கே. மணி, அருள் ஆகிய நான்கு பேர் பேரவை நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News