news Breaking News
clock

மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்: நிதியமைச்சர்

மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும்: நிதியமைச்சர்



சென்னை: கலைஞர் மகளிர் உரி மைத் தொகை திட்டத்தை யாரேனும் நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந் தளிக்கும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதி யாக தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் இடைக்கால பொது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரையாற்றிய அவர், திமுக ஆட்சியின் சாதனை களை எடுத்துரைத்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை நடைமுறைப் படுத்த பல தடைகளும் சோதனை களும் எழுந்த போதிலும், இந்த ஆட்சி பதவியேற்றவுடன் முறையாகப் பயிற்சி பெற்ற 23 பேரை அர்ச்சகர் களாக நியமித்ததாக அவர் தெரி வித்தார். மாவட்டம்தோறும் தோழி விடுதி கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நலத் திட்டங்கள், வடசென்னை வளர்ச்சித் திட்டங்கள் என அனைத் தும் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் போட்ட முதல் கையெழுத்தே மகளிர் விடியல் பேருந்து திட்டம் என்று நினைவுகூர்ந்த அமைச்சர், பெண் களுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்கும் வகையில் விடியல் பயணம் திட்டம் தொடங்கப்பட்டதையும் வலி யுறுத்தினார். கலைஞர் மகளிர் உரி மைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன் னோடியாக விளங்குவதாகவும் அவர் பெருமிதம் கொண்டார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் அளிப்பதில் இந்தியாவி லேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும், உயர்கல்வி மாணவர் சேர்க்கை தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ள தாகவும் அவர் தெரிவித்தார். பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம், பெற்றோரை இழந்த குழந்தை களை அரவணைக்கும் அன்புக்கரங் கள் திட்டம் ஆகியவற்றையும் அவர் எடுத்துரைத்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதி, மத மோதல்கள் எதுவும் இல்லா மல் தமிழ்நாடு அமைதியாக உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஜல் ஜீவன் திட்டத் திற்கான நிதி வழங்குவதை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப்பதை கண் டித்தார். கொரோனா நெருக்கடியை சமாளித்ததோடு மட்டுமல்லாமல், ஒன்றிய அரசால் ஏற்படுத்தப்படும் செயற்கை நிதி நெருக்கடிகளையும் திமுக அரசு வெற்றிகரமாக சமா ளித்து வருவதாக தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகையை யாரேனும் நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும் என்று உறுதியாக தெரிவித்த அவர், அந்தக் கொந்தளிப்பு உணர்வு இருக்கும்வரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது முத லமைச்சர் மு.க.ஸ்டாலினே என்று வலி யுறுத்தினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News