news Breaking News
clock

பிப்.23 இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

பிப்.23 இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்



பெரம்பலூர், பிப்.

- பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கிடையே, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்குப் பின்பு வாக்களார் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் உள்ளிட்ட பணிகளிலும், மேலும் எஸ்ஐஆர் திருத்தப் பணிகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்ட இனங்களிலும் தகுதியான அனைத்து வாக்காளர்களும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு உரிய அவகாசம் வழங்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனை பின்பற்றிட கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், இந்திய தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் திருத்தப் பணிகளுக்கு பிறகான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாளை 6 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன் நிமித்தமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பிப்.17 அன்று வெளியிடப்பட வேண்டிய இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.23 (திங்கட்கிழமை) அன்று வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News