ஏஐ போலி மருந்து சீட்டால் ஆபத்து: பிரதமருக்கு மருந்தாளுநர்கள் எச்சரிக்கை கடிதம்

ஏஐ போலி மருந்து சீட்டால் ஆபத்து: பிரதமருக்கு மருந்தாளுநர்கள் எச்சரிக்கை கடிதம்


 

புதுடெல்லி: “​நாட்​டில் தடை செய்​யப்​பட்ட மருந்​துகளை விற்​பனை செய்​வதற்​காக, ஏஐ மூலம் போலி​யாக மருத்​து​வர்​களின் பரிந்​துரை கடிதங்​கள் தயாரிக்​கப்​படு​கின்​றன. இதை தடுத்து நிறுத்த வேண்​டும்” என்று பிரதமர் மோடிக்கு அகில இந்​திய வேதியி​லா​ளர்​கள் மற்​றும் மருந்​தாளுநர்​கள் சங்​கம் (ஏஐஓசிடி) எச்​சரிக்கை கடிதம் அனுப்பி உள்​ளனர்.


இதுகுறித்து பிரதமர் மோடிக்கு ஏஐஓசிடி அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பம் மூலம் போலி​யாக மருத்​து​வர்​களின் மருந்து பரிந்​துரை சீட்​டு​கள் உரு​வாக்​கப்​படு​கின்​றன. அவற்​றில் போலி மருத்​து​வ​மனை​களின் பெயர்​கள், போலி நோயாளி​களின் தகவல்​கள் அடங்​கி​யுள்​ளன. அவற்​றின் மூலம் தடை செய்​யப்​பட்ட மருந்​துகள் ஆன்​லைனில் விற்​பனை செய்​வது அதி​கரித்து வரு​கிறது. இந்​தப் போக்கு பொது​மக்​களின் உடல்​நலத்​துக்கு மிக அச்​சுறுத்​தலாக உள்​ளது.


குறிப்​பாக ஏஐ.​யால் உரு​வாக்​கப்​பட்ட மருந்து சீட்​டு​களின் மூலம் ஆன்​லைனில் அதி​க​மாக நோய் எதிர்ப்பு மருந்​துகள் (ஆன்​டிப​யாட்​டிக்), மனநல சிகிச்​சைக்கு வழங்​கப்​படும் மருந்​துகள், ஓபி​யம் கலந்த மருந்​துகள் மற்​றும் அட்​ட​வணை எச் மற்​றும் அட்​ட​வணை எக்ஸ் ஆகிய​வற்​றில் கட்​டுப்​படுத்​தப்​பட்ட மருந்​துகள் விற்​கப்​படு​கின்​றன. இது பொது​மக்​களின் உடல்​நலத்​தில் மிக மோச​மான விளைவு​களை ஏற்​படுத்​தும். எனவே, இந்த விவ​காரத்​தில் பிரதமர் மோடி நேரடி​யாக தலை​யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.


ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட மருந்து சீட்​டு​களை சில ஆன்​லைன் இணை​யதளங்​கள் ஏற்​றுக் கொண்டு மருந்​துகளை விநி​யோகிக்​கின்​றன. இது சட்​ட​விரோத​மாகும். இது​போன்ற செயல்​கள் இந்​தி​யா​வின் மருந்​துக் கட்​டுப்​பாட்​டுத் துறையை சீர்​குலைப்​ப​தாகும். மேலும், இ பார்​மசி என்ற பெயரில் சட்​ட​விரோத​மாக செயல்​படும் இணை​யதளங்​கள், ஜிஎஸ்​ஆர் 817(இ) மற்​றும் ஜிஎஸ்​ஆர் 220 (இ) ஆகிய அரசு அறிவிக்​கை​யின் அடிப்​படை​யில் இயங்​கு​வ​தாக கூறிக் கொள்​கின்​றன. இது சட்​டத்​தில் உள்ள ஓட்​டைகளை பயன்​படுத்​திக் கொள்​வ​தாகும்.


2 அறிவிக்​கைகளை அரசு வெளி​யிட்​டுள்​ளது. அவற்றை ஆன்​லைன் விற்​பனைக்​காகத் தவறாகப் பயன்​படுத்​துகின்​றனர். மருந்து சீட்​டு​களை முறைப்​படி ஆரா​யாமல், பொறுப்​பில்​லாமல் இது​போல் விற்​பனை நடக்​கிறது. எனவே, ஏஐ மூலம் போலி மருந்து சீட்​டு​கள் உரு​வாக்​கப்​படு​வதை உடனடி​யாக தடுக்க வேண்​டும். சட்​ட​விரோத​மாக ஆன்​லைனில் மருந்​துகள் விற்​பவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அதில் ஏஐஓசிடி கூறி​யுள்​ளது.


இதுகுறித்து ஏஐஓசிடி பொதுச் செய​லா​ளர் ராஜீன் சிங் கூறும்​போது, “மருந்து சீட்​டு​களை நேரடி​யாக ஆய்வு செய்ய முடி​யாத நிலை​யில், ஆன்​லைனில் வழங்​கப்​படும் மருந்து சீட்​டு​கள் உண்​மையா அல்​லது போலியா என்​பதை வேறு​படுத்தி பார்ப்​பது கடினம்​. அதே​நேரத்​தில்​ நேரடி​யாக மருத்​து​வர்​கள்​ வழங்​கும்​ மருந்​து சீட்​டு​களில்​ சந்​தேகம்​ ஏற்​பட்​​டால்​ குறிப்​பிட்​ட மருந்​துகளை மருந்​​தாளுநர்​கள்​ வழங்​கு​வ​தில்​லை” என்​றார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%