news Breaking News
clock

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் மூடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் திறப்பு

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் மூடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் திறப்பு

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் மூடப்பட்ட சுற்றுலாத் தலங்கள் திறப்பு

துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவு

 

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​திய பிறகு மூடப்​பட்ட சுற்​றுலாத் தலங்​களில் பெரும்​பாலானவற்றை மீண்​டும் திறக்க துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்​தர​விட்​டுள்​ளார்.


ஜம்மு காஷ்மீர் பஹல்​காம் சுற்​றுலாத் தலத்​தில் கடந்த ஆண்டு ஏப்​ரல் 22-ம் தேதி பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் திடீர் தாக்​குதல் நடத்​தினர். அதில் 26 பேர் கொல்​லப்​பட்​டனர். அவர்​களில் 25 பேர் சுற்​றுலாப் பயணி​கள். இதையடுத்​து, பாது​காப்​புக் கருதி 48 சுற்​றுலாத் தலங்​கள் மூடப்​பட்​டன.


இந்​நிலை​யில், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பிறகு கடந்த 10 மாதங்​களாக காஷ்மீர் சுற்​றுலா பாதிக்​கப்​பட்​டது. பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்டு சுற்​றுலாத் தலங்​கள் கண்​காணிக்​கப்​பட்டு வரு​கின்​றன. இதுகுறித்து உயர​தி​காரி​களு​டன் விரி​வான ஆலோ​சனை நடத்​தினேன். அதன் அடிப்​படை​யில் தற்​போது 14 சுற்​றுலாத் தலங்​களை உடனடி​யாக திறக்க உத்​தர​விட்​டுள்​ளேன்.


அந்​தப் பகு​தி​களில் உள்​ளூர் மக்​கள் மற்​றும் சுற்​றுலாப் பயணி​கள் அச்​சமின்றி சென்று வரலாம். அதற்​கான முழு பாது​காப்பு ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர் கூறி​னார்.


மொத்​த​முள்ள 48 சுற்​றலாத் தலங்​களில் இதுவரை 42 சுற்​றுலாத் தலங்​கள் திறக்​கப்​பட்டு விட்​டன. மீத​முள்ள 6 சுற்​றுலாத் தலங்​கள் விரை​வில் திறக்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.


இதற்​கிடை​யில், கடந்த ஜனவரி மாதம் மட்​டும் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட சுற்​றுலாப் பயணி​கள் காஷ்மீர் வந்து சென்​றுள்​ளனர். தற்​போது ஜம்மு காஷ்மீரில் பனிப்​பொழிவு அதி​கரித்​துள்​ள​தால், சுற்​றுலாப் பயணி​களின் வருகை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. இதன் மூலம் காஷ்மீரில் சுற்​றுலா தற்​போது இயல்பு நிலைக்கு திரும்​பி​யிருப்​ப​தாக அதி​காரி​கள்​ தெரிவித்​தனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News