ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு மெட்ரோவில் இலவசப்பயணம்

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு மெட்ரோவில் இலவசப்பயணம்



சென்னை, பிப்.

- சென்னை நேரு வெளிப்புற அரங்கில் சனிக்கிழமையன்று (பிப். 14) நடைபெறவுள்ள “ஏ.ஆர்.ரஹ்மானின் தி வொண்டர்மென்ட் டூர்” இன்னிசை கச்சேரிக்குச் செல்லும் ரசிகர்களுக்குச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகிழ்ச்சி யான செய்தியை அறிவித்துள்ளது. நாய்ஸ் அண்ட் கிரெய்ன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ள இந்தத் திட்டத்தின்படி, இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டை வைத்திருப்பவர்கள் சென்னையில் உள்ள எந்தவொரு மெட்ரோ நிலையத்திலிருந்தும் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை இலவசமாகப் பயணம் செய்யலாம். இந்த நுழைவுச் சீட்டில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து ஒருமுறை சென்று வர அனுமதி அளிக்கப்படுகிறது. ரசிகர்களின் வசதிக்காகச் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து விமான நிலையம், விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை செல்லும் கடைசி ரயில்கள் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%