ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.

போளூர் பேருந்து நிலையம் அருகில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.


 அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் (LPF-CITU-AITUC-INTUC-HMS-AIUTC-UTUC) மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தொழிலாளர்கள் வாழ்வை சீரழித்து முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் 26.11.25 புதன்கிழமை காலை11.00 மணிக்கு போளூர் நகராட்சி பேருந்து நிலையம் எதிரில் தாமோதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உதயகுமார், ராஜேந்திரன்,செல்வம் பாலமுருகன், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன்,ரவி தாசன்,விக்ரமன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

 கோரிக்கைகள்

1)4 சட்டத் தொகுப்புகளை ரத்து செய்திடு/

2)SIR தீவிர திருத்தம் செய்வதை திரும்பப் பெறுக 

3) பெண் தொழிலாளர்களுக்கு 

இரவு நேர பணி என்பதை கைவிடு.

4) குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 26,000 வழங்கு.

5) மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறு.

6) காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் முறையை கைவிடு.

7) விவசாய விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்கு.

8) 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்திடு, ரூபாய் 600 தினக் கூலியாக வழங்கு.

9) பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்து.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%