ஒன்றிணைந்து செயல்படுவோம்; தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம்’’: பிரேமலதா விஜயகாந்த் கடிதம்
சென்னை, பிப். –
‘‘வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வேண்டி, உண்மை, உழைப்பு, அர்ப்பணிப்பு, விசுவாசம், கண்ணியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, நமது இயக்கம் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை நம் உழைப்பின் மூலம் நிரூபிக்க வேண்டும் என இந்த கொடி நாளில் உறுதிமொழி ஏற்றுக் கொள்வோம்’’. என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
நாளை (12ந் தேதி) தேசிய முற்போக்குக் கழகத்தின் 26ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:–
‘‘இந்தக் கொடி நாளை, அனைத்து கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
2000ஆம் ஆண்டு நமது தலைவர் புரட்சி கலைஞர் கேப்டனால் அறிமுகப்படுத்தப்பட்ட மூவர்ணக் கொடி, சமதர்மம், சமூக நீதி, சனாதனம், சமசிந்தனை மற்றும் சமஉரிமை ஆகிய கழகக் கொள்கைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லும் சின்னமாக விளங்குகிறது.
அனைத்து மாவட்டம், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி மற்றும் கிராமப்புற கிளைகளில் பழைய கொடிகளை அகற்றி புதிய கழகக் கொடிகளை ஏற்றி, கொடி இல்லாத இடங்களில் புதிய கொடிகளை அமைக்க வேண்டும்.
"இயன்றதை செய்வோம்! இல்லாதவர்க்கே!!" என்ற தலைவரின் கோட்பாட்டின்படி, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை வழங்க வேண்டும்.
மேலும், கொடி நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி, பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை அதிகளவில் கழக உறுப்பினர்களாக இணைக்க வேண்டும்.
கேப்டன் புகழ் ஓங்கவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புகழ் நிலைத்து நிற்கவும், இந்த கொடி நாளில், நமது கழகக் கொடியை தமிழகம் முழுவதும் பட்டொளி வீசி பறக்கவைத்து, நமது முரசு எட்டு திக்கும் வெற்றி முரசாக ஒலிக்கச் செய்வோம்.
‘‘தமிழன் என்று சொல்லடா!, தலைநிமிர்ந்து நில்லாடா!!, நன்றி! வணக்கம்....
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?