ஒரே மாவட்டத்தில் திடீரென அதிகரித்த எச்ஐவி பாதிப்பு! பின்னணியில் சமூக ஊடகங்களா?

ஒரே மாவட்டத்தில் திடீரென அதிகரித்த எச்ஐவி பாதிப்பு! பின்னணியில் சமூக ஊடகங்களா?


 

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு வர்தமன் மாவட்டத்தில் திடீரென எச்ஐவி பாதித்தவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்திருப்பது சுகாதாரத் துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.


அதிலும், ஏழைத் தொழிலாளர்களோ, பமர மக்களாகவோ இல்லாமல், புதிதாக எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் நன்கு படித்த, தொழிலில் கொடிகட்டிப் பறக்கும், சமூகத்தில் மிகுந்த செல்வாக்குக் கொண்ட நபர்களாக இருப்பதுதான் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.


வர்தமான் நகரப் பகுதியில் தீடீரென எச்ஐவி பாதிப்பு அதிகரித்த நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்வி மையங்கள், அரசு அலுவலகங்கள், விடுதிகள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களிடையே, சுகாதாரத் துறை விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில், ஓரினச் சேர்க்கை மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவு போன்றவை, எச்ஐவி பாதிப்புக்குக் காரணங்களாக உள்ளன. அதிலும், சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள்கூட விழிப்புணர்வுடன் இல்லாதது கவலையை ஏற்படுத்துகிறது. 3 மாதங்களுக்கு முன்பு எச்ஐவி பாதிப்பு 50 ஆக இருந்தது. அதிலும் பலரும் தொழிலாளர்களாக இருந்தார்கள் என்கிறார்.


தற்போது எச்ஐவி பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் மருத்துவர்கள், பல்கலை பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மென்பொருள் நிறுவன அதிகாரிகளும் அடங்குவர். இவர்களில் பலர் நீண்ட காலமாக உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி, மருத்துவப் பரிசோதனையின்போது எச்ஐவி உறுதி செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.


எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள், சமூக ஊடகங்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆனவர்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் கிடைத்திருக்கிறது.


கல்வி, சமூகத்தில் நல்ல பதவியில் இருப்பவர்கள் கூட, போதிய விழிப்புணர்வு இல்லாததால் பாதுகாப்பாற்ற உடலுறவால் இதுபோன்ற நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். எத்தனைதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், மக்களிடையே இருக்கும் ஒரு அலட்சியப் போக்குதான் இந்த நோயின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. மேலும், ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டாலும் மருத்துவப் பரிசோதனையை தவிர்ப்பதும், அதற்குள் பலருக்கும் இந்த நோய் அவர்கள் மூலமாக பரவுவதும் அதிகரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%