news Breaking News
clock

கடந்த 5 ஆண்டுகளில் 71,963 திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்கள்: மத்திய மந்திரி எல்.முருகன்

கடந்த 5 ஆண்டுகளில் 71,963 திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ்கள்: மத்திய மந்திரி எல்.முருகன்


 

புதுடெல்லி,


மக்களவையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-


மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டப்பூர்வ அமைப்பான மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திரைப்பட சட்டம் 1952, திரைப்பட தணிக்கை விதிகள் 2024 மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதலின்கீழ், மக்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக திரைப்படங்களை தணிக்கை செய்கிறது.


இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நாகரிகம், ஒழுக்கம் போன்ற சட்டப்பூர்வ அம்சங்களை மீறும் வகையிலோ, அவதூறு, நீதிமன்ற அவமதிப்பு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் போன்றவை இடம் பெற்றாலோ மட்டுமே காட்சிகளை நீக்குவதற்கு அல்லது மாற்றியமைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.


கடந்த 5 ஆண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) 71,963 திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய திரைப்படச் சட்டம் வகை செய்கிறது. இதுபோன்ற சூழல்களில் நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News