news Breaking News
clock

எதிர்க்கட்சி தலைவர் பேச முடியா விட்டால் விவாதமே அவசியமில்லை: ஜெய்ராம் ரமேஷ்

எதிர்க்கட்சி தலைவர் பேச முடியா விட்டால் விவாதமே அவசியமில்லை: ஜெய்ராம் ரமேஷ்


 

புதுடெல்லி,


நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி கடந்த திங்கட்கிழமை அவையில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவை இந்திய ராணுவம் எதிர்கொண்டது பற்றி நரவானே எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்ட சில விசயங்களை பற்றி பேச வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன.


தொடர்ந்து பல்வேறு முறை அவையில் அமளியும், கூச்சலும் எழுந்து, நாள் முழுவதற்கும் அவை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்தி அவையின் விதிகளை மீறுகிறார் என பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


 இந்நிலையில், ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், சீன ராணுவம் நம்முடைய எல்லைக்குள் நுழைந்த முக்கிய தருணத்தில், ராணுவ தலைமை தளபதியோ காத்திருக்க வைக்கப்படுகிறார். ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, பிரதமரோ, நீங்கள் எது சரியென நினைக்கிறீர்களோ அதனை செய்யுங்கள் என கூறுகிறார்.


நாட்டின் பாதுகாப்பில் மிக தீவிர நெருக்கடியான நேரத்தில், அரசியல்தனத்துடன் தன்னுடைய கையை பிரதமர் மோடி உயர்த்துகிறார். அதுபற்றி ராணுவ தலைமை தளபதி நரவானே எழுதும்போது, ராணுவத்தை அரசியல் தலைமை தனித்து விட்டு விட்டது என உணர்ந்தேன் என குறிப்பிட்டு உள்ளார்.


இந்த உண்மையை பேச விடாமலே என்னை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தடுத்து வருகின்றனர். நாடு கேள்விகளை கேட்டு கொண்டிருக்கிறது. ஆனால், அரசோ பதிலளிக்காமல் தப்பியோடுகிறது என பரபரப்பாக பதிவிட்டு உள்ளார்.


இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் பேசும்போது, மக்களவையின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பேசினால் மட்டுமே பிரதமர் மோடி பேசுவார். எதிர்க்கட்சி தலைவர் பேச முடியா விட்டால் விவாதமே அவசியமில்லை. பிரதமர் மோடி விவாதத்திற்கு பதிலளிக்கிறார். ஆனால், விவாதத்தினை துவக்கி வைப்பதே மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர்தான் என்றார்.


ஆனால், பிரதமர் மோடி அவையில், தேர்தல் தொடர்பான பேச்சை பேசுவார், பண்டிட் நேரு, காங்கிரஸ் கட்சியை அவமதிப்பார் என்பது நமக்கு தெரியும் என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News