மும்பை - புனே நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: 12 மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள்

மும்பை - புனே நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: 12 மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள்


புனே: ம​கா​ராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்​பையி​லிருந்து 120 கிலோ மீட்​டர் தொலை​வில் உள்ள புனே நகருக்கு அதிவேக நெடுஞ்​சாலை அமைக்​கப்​பட்டு உள்​ளது. இந்த சாலை​யில் பயணிக்க வேண்​டு​மா​னால் சுங்​கக் ​கட்​ட​ணம் செலுத்த வேண்டும்.


இந்​நிலை​யில் மும்பை - புனே நெடுஞ்​சாலை​யில் ராய்​காட் மாவட்டம் ஆதோஷி சுரங்​கப்​பாதை அருகே நேற்று முன்​தினம் ஒரு காஸ் டேங்​கர் லாரி கவிழ்ந்து விபத்​துக்​குள்​ளானது. லாரி​யில் புரோப்​பிலீன் என்ற காஸ் அடைக்​கப்​பட்டு இருந்​தது. இதனால் காஸ் கசி​யும் அபா​யம் இருந்​த​தால் வாக​னங்​கள் செல்ல அனுமதிக்​கப்​பட​வில்​லை.


இதையடுத்து அந்த லாரி​யின் பின்​னால் வந்த வாக​னங்​கள் வரிசை​யாக அணிவகுத்து நின்​றன. சாலை​யில் இருந்த காஸ் டேங்​கர் லாரியை அப்​புறப்​படுத்த நெடுஞ்​சாலை ஊழியர்​களும், தீயணைப்​புப் படை வீரர்​களும் பெரும் முயற்சி செய்​தனர். ஆனால் அதை அகற்​று​வதற்கு சிரமம் நீடித்​தது. இந்த விபத்து மாலை 4.45 மணிக்கு ஏற்​பட்​டது.


மாலை 5 மணி முதல் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்டு சுமார் 12 கிலோ மீட்​டர் தொலை​வுக்கு வாக​னங்​கள் நீண்ட வரிசை​யில் அணி வகுத்து நின்​றன. விபத்து நடந்த இடம் வனப்​பகு​தி​யாகும். நள்​ளிரவு வரை இந்த நிலை நீடித்​தது. இதையடுத்து போக்​கு​வரத்து போலீ​ஸார், எதிரே வரும் வழி​யில் வாக​னங்​களை ஒருபக்கமாக செல்ல அனு​ம​தித்​தனர். இருந்​த​போதும் போக்​கு​வரத்து நெரிசல் குறைய​வில்​லை.


இதனால் வாகன ஓட்​டிகள் பெரும் அவதிக்​குள்​ளா​யினர். தாங்​கள் அளித்த சுங்​கக்​ கட்​ட​ணத்தை தங்​களுக்​குத் திருப்​பித் தர வேண்டும் என்று அவர்​கள் சுங்​கச்​சாவடி அதி​காரி​களிடம் கோஷமிட்​டனர். அப்​பகு​தி​யில் போது​மான குடிநீர், கழிப்​பறை உள்​ளிட்ட எந்​த​வித அடிப்​படை வசதி​யும் இல்​லாத​தால்​ வாக​ன ஓட்டிகள்​ அவதிப்​பட்​டனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%