கடற்கரை..

கடற்கரை..


நீல வானம் முத்தமிடும் கடற்கரை. 

ஓயாத அலைகளின் பரவசமூட்டும் நித்திய இசை.

திடீரென எழும் திகில் எழுப்பும் அலைகள். 

சூரியன் சிரிக்கும் செம்மஞ்சள் மாலை.

நெஞ்சைத் தழுவி கதைகள் சொல்லும் காற்று.

நேரத்தை மறக்கச் செய்யும் ஆங்காங்கே காணப்படும் காலடிச்சுவடுகள்.  

கைகோர்த்துச் செல்லும் காதல் ஜோடிகளின் பரவசமூட்டும் ஒரு வித களிப்பு நடை நடனம் நமக்கும் ஒருவித சிலிர்ப்பைத் தரும்.

நம் கவலைகள் எல்லாம் தூரத்தில் அலையோடு அடித்துச் சென்று கரையும் கடலில்.

அமைதியில் கரையும் மனத்தின் பாரம்.

இதுதான் கடல் சொல்லும் வாழ்க்கையின் ரகசியம்.

போய், போய் வரும் அலையாய் நம் பயணமும் தொடரும் இனிதாய்.


அன்புடன்

உ.மு.ந.ராசன் கலாமணி

கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%