காங்கிரஸ் எம்.பி.க்கள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிழைகள்: சரிசெய்து வழங்க ஓம் பிர்லா அறிவுரை

காங்கிரஸ் எம்.பி.க்கள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிழைகள்: சரிசெய்து வழங்க ஓம் பிர்லா அறிவுரை


புதுடெல்லி, பிப்.


நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசில் பிழைகள் இருப்பதாக மக்களவை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இருப்பினும், நோட்டீசை நிராகரிக்க வேண்டாம் என்றும், பிழைகளை சரிசெய்து திரும்பப் பெற்று நடவடிக்கைகளை விதிகளின்படி தொடருமாறும் ஓம் பிர்லா மக்களவை செயலகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.


காங்கிரஸ் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தற்போதைய முதல்கட்ட அமர்வில் விவாதத்துக்கு வர வாய்ப்பில்லை எனத் தெரிகின்றது. மார்ச் மாதம் தொடங்கவுள்ள பட்ஜெட் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வில்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஓம் பிர்லா அறைக்குச்


சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள்


இதனிடையே செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசுகையில், சபாநாயகர் அறைக்குள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 முதல் 25 எம்.பி.க்கள் நுழைந்து, அவரிடம் முறையற்றவாறு நடந்து கொண்டனர். நானும் அங்குதான் இருந்தேன். பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் இருந்தனர்.


சபாநாயகர் மிகவும் மென்மையான மனிதர். இல்லையெனில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். தான் பேசுவதற்கு எவருடைய அனுமதியும் தேவையில்லை என்று ராகுல் காந்தி கூறினார். யாருடைய அனுமதியும் இல்லாமல், தன்னுடைய விருப்பம்போல் பேசுவேன் என்றும் ராகுல் கூறினார். ஆனால் தலைவர் அனுமதியின்றி, அவையில் உறுப்பினர்கள் எவரும் பேச முடியாது. பிரதமர் கூட அனுமதியுடன் மட்டுமே பேச முடியும். அனைவரும் அனுமதியுடன்தான் பேசுகிறார்கள். ராகுல் காந்திக்கு என்னால் பாடமெடுக்க முடியாது. அவர் எந்த உலகில் வாழ்கிறார் என்பது புரியவில்லை. அவர் எந்தக் கொள்கைகளால் இயங்குகிறார்?நாடாளுமன்றம் இப்படி செயல்பட முடியாது என்று அவருக்கு காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் விளக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


மக்களவையில் இன்று பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், எங்களுக்கு நீதி வேண்டும் என்ற முழக்கத்துடன் அவையைவிட்டு வெளிநடப்பு செய்தனர். 6 நாட்களாக முடங்கிய மக்களவை இன்று தொடர்ந்து நடந்து வருகிறது.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தில், சீன விவகாரம் குறித்து பேசுவதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதனிடையே கடந்த 4 ஆம் தேதி அன்று ஜனாதிபதி உரைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உரையாற்றுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி அன்று அவைக்கு வரவில்லை.'பிரதமர் மோடியை நான்தான் வர வேண்டாம் என்று கூறினேன், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் சதி செய்யத் திட்டமிட்டிருந்தனர்' என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். பெண் எம்.பி.க்கள் குறித்து கருத்து தெரிவித்ததால் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சி தரப்பில் கண்டனங்கள் எழுந்தன.


இந்த நிலையில்ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை காங்கிரஸ் கட்சியினர் மக்களவை செயலகத்தில் நேற்று வழங்கினர். இந்த நோட்டீசில்ல் பிப்ரவரி 2026 என்பதற்கு பதிலாக நான்கு இடங்களில் பிப்ரவரி 2025 என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், விதிகளின்படி, இந்த நோட்டீஸை மக்களவை செயலகம் நிராகரிக்கக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், நோட்டீஸை நிராகரிக்க வேண்டாம் என்றும் பிழையைத் திருத்தம் செய்து வாங்கி விதிகளின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் தொடருமாறும் மக்களவை செயலகத்துக்கு ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%