காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுத்திடுக: கோவை கலெக்டர் பவன்குமாரிடம் விவசாயிகள் கோரிக்கை

காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுத்திடுக: கோவை கலெக்டர் பவன்குமாரிடம் விவசாயிகள் கோரிக்கை



கோவை, பிப். –


கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது.


கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலை துறை சார்பாக ராபி பருவ காய்கறி சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் தொடர்பாக கருத்துக்காட்சியும், வேளாண் வணி கம் மற்றும் விற்பனைத்துறை சார்பாக இரண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவன மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தொடர்பாக கருத்துக் காட்சியும் அமைக்கப்பட்டது.


மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகள் நீர் வழிப்பாதையிலுள்ள முட்புதர்களை அகற்றவும், குளம், குட்டை ஆக்கிரமிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் குளம், குட்டைகளை தூர்வாருமாறும், சாலையோரங்களிலுள்ள முட்புதர் களை அகற்றவும், தென்னை நார் கழிவுகள் மூலம் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்திடவும், நொய்யல், கௌசிகா நதி மற்றும் பவானி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.


இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், முதுநிலை மண்டல மேலாளர் பழனிகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அழகிரி, இணை இயக்குநர் (வேளாண்மைத் துறை) தமிழ்செல்வி, துணை இயக்குநர் (தோட்டக் கலைத்துறை) பாலசுப்பிரமணியன், கலெக்டன் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தகுமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%