மொடக்குறிச்சியில் நியாயவிலை கட்டிடம்: அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
Feb 04 2026
11
ஈரோடு, பிப். –
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள முழுநேர நியாயவிலைக் கடையின் புதிய கட்டிடத்தை, வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
மொடக்குறிச்சி வட்டத்திற்கு உட்பட்ட கணபதிபாளையத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் செயல்பட்டு வந்த கிளியம்பட்டி முழுநேர நியாயவிலைக் கடை, இதுவரை 1,184 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வந்தது. டி.மேட்டுப்பாளையம், சீரங்கம்பாளையம், பெரளிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், சுமார் 1.5 முதல் 2.05 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து அத்தியாவசியப் பொருட்களை பெற்றுவந்தனர்.
இதனால், பயணத் தூரத்தை குறைத்து தங்கள் பகுதியில் புதிய நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச்சர் சு.முத்துசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்று, சுமார் 505 குடும்ப அட்டைகள் பயன்பெறும் வகையில் புதிய முழுநேர நியாயவிலைக் கடை திறக்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. இக்கடை அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது 913 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 340 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் என மொத்தம் 1,253 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 7.64 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?