news Breaking News
clock

ஈரோடு ஈகேஎம் அப்துல் கனி மதரசா பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஈரோடு ஈகேஎம் அப்துல் கனி மதரசா பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு



ஈரோடு, பிப். –


ஈரோடு ஈ.கே.எம்.அப்துல் கனி மதரசா இஸ்லாமியர் பள்ளியில், 2004–2005 கல்வியாண்டில் பயின்று வெளியேறிய முன்னாள் மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய பள்ளியின் தாளாளர் அல்ஹாஜ் ஜி. முகமது தாஜ் முஹ்யித்தீன்,


“இந்தப் பள்ளியில் பயின்ற அனைவரும் எங்களுக்கு எப்போதும் பிள்ளைகளே. எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும், அதே பாசத்துடனும் மரியாதையுடனும் மாணவர்கள் பழகுவது மகிழ்ச்சியளிக்கிறது,” எனத் தெரிவித்தார்.


மேலும், முன்னாள் மாணவர்கள் தங்களின் பொருளாதார நிலைக்கேற்ப, தற்போது பள்ளியில் பயின்று வரும் ஏழை மாணவ–மாணவிகளில் ஒருவரையாவது மேல்நிலை கல்வி அல்லது கல்லூரி படிப்பு வரை தத்தெடுத்து கல்வி உதவி வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.


இதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவ, மாணவிகள் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இப்பள்ளியில் பணியாற்றி மறைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில், ஈ.கே.எம். தாஜ் முகமது கலீல் ஹாஜி, முனைவர் ஏ.முகமது உதுமான், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.மூசா ராஜா, மதரசா இஸ்லாமிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஜுனைதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News