காட்பாடி ரெட்கிராஸ் கிளையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு!

காட்பாடி ரெட்கிராஸ் கிளையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு!


வேலூர், பிப். 21-

 காட்பாடி வட்ட கிளையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு கூட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாராயணா திருமண மண்டபத்தில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தலைவர் எ.செந்தில்குமார் ஒப்புதலுடன், துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.பாரிவள்ளல், மாவட்ட மேலாண்மைக்குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  

 காட்பாடி கிளையின் மேலாண்மைக்குழு உறுப்பினர்களாக செ.நா.ஜனார்த்தனன், எஸ்.எஸ்.சிவவடிவு, ஆர்.விஜயகுமாரி, வி.பழனி, என்.தங்கவேல், டி.லிவிங்ஸ்டன் மோசஸ், எம்.திலகர், என்.பிரகாஷ், டாக்டர் வீ.தீனபந்து, எல்.ரவிச்சந்திரன், எ.ஆனந்தகுமார், எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், ஜெ.குமரவேல், என்.ஞானவேல், பி.என்.ராமச்சந்திரன், ஆர்.ராதாகிருஷ்ணன், டி.செல்வமணி, கே.குணசேகரன், ஆர்.சுதாகர், எஸ்.அருள்சுடர், வி.ஆறுமுகம், ஆர்.லட்சுமிநாராயணன் ஆகியோர் ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டனர்.

 பின்னர் நடைபெற்ற மேலாண்மைக்குழு கூட்டத்தில் அவைத்தலைவராக முனைவர் செ.நா.ஜனார்த்தனன், செயலாளராக எஸ்.எஸ்.சிவவடிவு, அவை துணைத்தலைவராக ஆர்.விஜயகுமாரி, பொருளாளராக வி.பழனி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 துணைத்தலைவர் வி.பாரிவள்ளல், ஆர்.சீனிவாசன் ஆகியோர் தேர்தல் அலுவலர்களாக செயலாற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனனிடம் வழங்கினர்.

 காட்பாடி கிளையின் சார்பில் ரத்த பரிசோதனை நிலையம் மீண்டும் தொடங்க உரிய முயற்சிகள் மேற்கொள்வது, மினி ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவது மற்றும் சிறுநீரக டயாலிசிஸ் மையம் அமைப்பதற்கான சாத்யக் கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%