news Breaking News
clock

செய்யாறு அருகே தளரப்பாடியில் அருள்மிகு கொண்டியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்:

செய்யாறு அருகே தளரப்பாடியில் அருள்மிகு கொண்டியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்:


 திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.


செய்யாறு பிப் .21,


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தளரப்பாடி கிராமம் ஏரிக்கரையோரம் புதிதாக நிர்மானித்துள்ள அருள்மிகு ஸ்ரீ கொண்டியம்மன் கோயில் மாசி மாத அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது 


இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமங்கள், மாங்கல்யஹோமம், நடைபெற்றது.


பின்னர் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். 


பின்னர் அந்த புனித நீரானது பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. 


இதைத்தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ கொண்டியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கொண்டியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

  மகா கும்பாபிஷேக வைபவத்தில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


பட விளக்கம் :செய்யாறு அடுத்த தளரபாடி ஏரிக்கரையோரம் புதிதாக நிர்மாணித்துள்ள அருள்மிகு ஸ்ரீ கொண்டியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News