news Breaking News
clock

மோரணத்திற்கு நகரப் பேருந்து: 100 நாள் வேலை செய்யும் பெண்கள் அ.தி.மு.க., பொறுப்பாளர்களிடம் கோரிக்கை முன் வைப்பு!

மோரணத்திற்கு நகரப் பேருந்து: 100 நாள் வேலை செய்யும் பெண்கள் அ.தி.மு.க., பொறுப்பாளர்களிடம் கோரிக்கை முன் வைப்பு!


செய்யாறு, பிப். 21 -

செய்யாறில் அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் 100 நாள் வேலை செய்யும் கிராம மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

செய்யாறு அடுத்த வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் வயலூர் ராமநாதன் ஏற்பாட்டில் அழிவிடைதாங்கி,‌ வடமனப்பாக்கம், மோரணம் உள்ளிட்ட 5 கிராமங்களில் 100 நாள் வேலை செய்யும் மக்களை நேரடியாக சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க., அறிவித்துள்ள முதற்கட்ட 10 தேர்தல் அறிக்கை கொண்ட துண்டு பிரசுரங்களை கிராம பெண்களிடம் வழங்கினர். அதில், உள்ள விவரங்களை எடுத்துக் கூறினர். மோரணம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் செய்யாறில் இருந்து தங்கள் ஊரான மோரணத்திற்கு நகர பேருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 4 மாதங்களில் வந்ததும் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் பராசூர் பெருமாள், நம்பண்டி பாலன், அருண் தவமணி வெற்றிசெல்வன், கன்னியப்பன் சொல்லிட்டா 70-க்கும் மேற்பட்ட அதிமுக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் உடனிருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News