காதலுக்காக....

காதலுக்காக....



வி.கே.லக்ஷ்மிநாராயணன் 

 ராமகிருஷ்ணா நகர் 

போருர், சென்னை 600 116 


                      

மாலை ஆறு மணி.மார்கழி மாதத்து பனி இந்த தை மாதத்திலும்பொழிந்து கொண்டிருந்நது.ஞாயிற்றுக்கிழமையானதால் பீச்சில் கூட்டம் இருந்தது. உள்ளூர்க்காரர்களுக்குமெரினா பீச் ஒரு இலவச பொழுதுபோக்குமிடமாக விளங்குகிறது. 


ஜோதியும் ராமும் கை கோர்த்தபடி சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தனர். 


" ஜோதி ! இந்த மாதிரி பீச் மணலில் நடக்கறது எவ்வளவு நல்லது தெரி யுமா ?" என்றான் ராம்.


" ம்..ம்..அதுவும் மாலை வெயில் கத கதப்பு மணலில் நடப்பது உடலுக்கு ரொம்பவும் நல்லது !" 


பீச்சில் ஆங்காங்கு நின்றபடியும் உட்கார்ந்தபடியும் சிலர் ஸெல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். இன்னும் சிலர் கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.


அப்பொழுது சற்று தூரத்தில் வந்துகொண்டிருந்த ஒரு வயதான ஜோடியைப் பார்த்த ராம் , " ஜோதி ! அங்கே பார்.இந்த வயதிலும் எவ்வளவு அந்நியோன்னியமா கை கோர்த்துக்கிட்டு வராங்க ! அந்தப்

பெரியவருக்கு 75 வயசு இருக்கலாம்."


உடனே ஜோதியும் , " ஆமாம்

ராம் ! பெரியம்மாவுக்கு 72 வயசு இருக்கலாம். நெற்றி நிறைய பொட் டும் வெண் பஞ்சு தலையில் மல்லி கைச்சரமும் வச்சுக்கிட்டு பழுத்த சுமங்கலியா இருக்காங்க. கிரேட் வேலன்டைன்ஸ் !" என்றாள்.


" அதாவது கல்யாணமாகி இன்னும் காதலிச்சிக்கிட்டிருக்காங்கன்னு சொல்றே!"


" அதிலென்ன சந்தேகம் ராம் ? காதலிச்ச பிறகு கல்யாணம். கல்யா ணத்துக்கப்புறமும் காதல் தொடரத் தானே செய்யும் !ஒருத்தரை ஒருத்தர் மனசார நேசிக்கிறதும் காதல் தானே ?"


" யெஸ். யு ஆர் டெக்னிகலி கரெக்ட் !"


திடீரென பரபரப்பு ஏற்பட்டது. ஆறுவயது சிறுமி ஒருவள் பிளாஸ்டிக் பந்தை தூக்கிப்போட்டபடி விளையாட பந்து காற்று வேகத்தில் கரையை நோக்கிப் பறந்தது.பந்தைத் துரத்திக் கொண்டு சிறுமியும்பின் தொடர்ந்து ஓடினாள்.


விபரீதம் அறிந்து உடனே ராம் அந்தச் சிறுமியை நோக்கி ஓட ஜோதிதிடுக்கி

ட்டாள். " ராம் ! ஓடாதே நில்லு !" என கத்திக்கொண்டே ராம் பின்னால் ஓடினாள்.


நல்லவேளையாக யாரோ ஒருவன் எதிர் திசையிலிருந்து ஓடி வந்து சிறுமியைக் காப்பாற்றினான்.


சிறுமியின் பெற்றோர் பதற்றத்துடன்

ஓடி வந்தனர். " ஷாலுக்குட்டி ! என்று அந்த ஆளிடமிருந்து சிறுமியை வாங்கி அணைத்துக்கொண்டாள் அம்மாக்காரி.


" ஏங்க ! குழந்தையை ஒழுங்கா பார்த்துக்க வேண்டாமா..இப்படியா அலட்சியமா இருக்கறது.?" 


" சாரி தம்பி ! எங்க முன்னாடிதான் விளையாடிக்கிட்டிருந்தா. எப்படியோ எங்க கண்ணுல மண்ணைத் தூவிட்டு ஓடிட்டா. ரொப்ப நன்றி தம்பி !"


பரபரப்பு ஓய்ந்தது.


" என்ன, பெரிய ஹீரோன்னு நினை 

ப்பா? அவ்வளவு டென்ஷன் ஆகி 

ட்டே?" ஜோதி கோபத்துடன் கேட்டாள்.


" என்னவோத் தெரியல்ல அந்தச் சிறமி மேல சொல்லவொண்ணாப் பாசம்..அதுக்கு ஏதாவது ஆகப் போவ தேங்குற கவலை..அதனால பதற்ற த்துல அப்படி நடந்துக் கிட்டேன். சாரி டியர் !" 


" ம்..ம் ..சரி சரி." 


அதன்பிறகு ஏழுமணி வரை பீச்சில் திரிந்தார்கள்.


" ராம்,நாழியாகிவிட்டது.புறப்படலாமா?"


" ஓ.கே.டாரலிங் ! அயம் அட் யுவர் டிஸ்போசல் !" 


இருவரும் தங்கள் இருப்பிடத்துக்குத் 

திரும்பினர்.


" ராம் ! நாம அவசரப்பட்டுவிட்டோமோ

ன்னு நினைக்கிறேன் !" பெருமூச்சு விட்டபடி கூறினாள் ஜோதி.


" லேட் ரியலிசேஷன்....ஆனாலும் நமக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை மை சரியோ தவறோ, அதைப் பற்றி 

இப்போது பேசி பயனில்லை." 


" இல்லை ராம் ! நம் காதலை நம்ம வீட்

டில ஏத்துக்க போராடி இருக்கணும்....

கடைசி வரை நின்னு ஒரு கை பார்த்தி

ருக்கணும். அதைவிட்டு....சே ! " மனத்

தில் குமைந்தாள் ஜோதி.


 " ஜோதி ! நம்மக் காதலை நம்ம வீட்டுக் காரங்க ஏத்துக்க முடியாதுன்னு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா பேசிட்டாங்க. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பிரயோஜனப் படல்ல.

நமக்கும் வேற வழி எதுவும் தெரிய ல்ல....ஸோ அதைப் பற்றி பேசி உபயோகம்ஒண்ணும் கிடையாது.


காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட நாளான அன்று ஜோதி, ராம் ஆவிகள் தம் தம் சமாதிகளுக்குள் புகுந்துகொண்டன !

                 ........................................

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%