டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது...
புலியிடம் மாட்டிக் கொண்ட 10 நிமிடங்களாக
அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை
நம் கல்விமுறை நமக்கு கற்றுக் கொடுக்கவே யில்லையே.!
காரணம். என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள்
நெருப்பிற்கு பயப்படும். கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும். இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்.
(a+b)2 =a2 + 2ab + b2
என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத் தினால் நமக்கு என்ன பயன்.?
விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது,
அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும். இந்த அறிவைக்கூடக் கற்றுக் கொடுக்காமல் பட்டங்கள் என்ன. சட்டங்கள் என்ன. பல்கலைக் கழகங்கள் என்ன.?
தென்னாப்பிரிக் காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டி யெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.
மற்றவர்களை மதிப்பது எப்படி.?
மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி.?
பெற்றோரிடம் நடந்து கொள்வது எப்படி.?
சாலை விதிகள் என்ன.?
ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்.?
அடிப்படைச் சட்டங்கள் என்ன.?
நமக்கான உரிமைகள் என்ன.?
காவல் நிலையங்களை எப்படி அணுகுவது.?
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது.?
விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது.?
மாரடைப்பு வந்தால் என்ன செய்வது.?
நோய்களை எவ்வாறு கண்டறிவது.?
எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை. என்ன பின் விளைவுகள் உள்ளவை.?
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது.?
கணவனிடம் எப்படி நடந்து கொள்வது.?
மற்றவர்களை நேசிப்பது எப்படி.?
நேர்மையாய் இருப்பது எப்படி.?
இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன்தான் என்ன.?

*🌹✍️முத்து ஆனந்த்
வேலூர் - 632 002*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?