காதல் கண்கள் உறங்கிடுமோ

காதல் கண்கள் உறங்கிடுமோ


அறுசீர் மண்டிலம்.


காதல் கண்கள்

உறங்கிடுமோ

கருத்தாய்க் கனவு

கொண்டிடுமோ!

ஓதும் காதல்

சிறப்பன்றோ

ஒண்மை வாய்ந்தே

கண்டிடுமோ!

மோத லில்லாக்

காதல்தான்

மேன்மை யாக

விளங்கிடுமே!

ஏத மில்லாக்

காதல்தான்

ஏற்ற மாகத்

திகழ்ந்திடுமே!


தென்றல் உறங்கும்

போதுகூட

திங்கள் உறங்கும்

போதுகூட

மன்றம் விளங்கும்

காதல்தான்

மாண்பா யுறங்க

மாட்டாதே!

அன்பின் மிகுதி

யாலேதான்

ஆகும் காதல்

எல்லாமே!

பண்பாய்க் காதல்

செய்திட்டால்

பாரில் உயர்ந்து

பேர்பெறலாம்!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*

திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%