அறிவாய் மனிதா அறிவாய்"

அறிவாய் மனிதா அறிவாய்"



ஒரு ரூபாய் சுண்ணாம்பு கட்டி

கரும்பலகையில்

அறிவொளி ஏற்றி வைத்து 

தன்னை கரைத்து 

உன்னை உயர்த்தும்.!!!


ஒரு சில ஆயிரங்களின் கைபேசியின் தொடர் பயன்பாடு!

பல கோடி பேரின் கண் பார்வையை இழக்கச் செய்யும்!

கதிர் வீச்சால் தூக்கம் போகும் 

மன அழுத்தம் நோயாய் மாறும்! 


வண்ண வண்ண நிறத்தால்

கண்ணை கவரும் குணத்தில் 

தன்னை கொடுத்து உன்னை மயக்கும்!

மண்ணில் விண்ணில் தோன்றும் நிகழ்வை காட்ட உதவும்! 

என்னில் உன்னில் இன்று உடல் உறுப்பாய் அதுவும் மாறும்!

ஆறாம் அறிவின் உச்சம் காணும்.


நெல்லிக்கனியின் சுவையை அதுவும் கண்ணில் காட்டும்! 

அந்தரங்க எட்டிக்காய்கள் 

உன்னை மயக்கும்.!

உள்ளம் மட்டும் தெளிவாக இருந்தால் உன்னை உயர்த்தும்.!

இன்பம் துன்பம் இரண்டும் 

இங்கே வாழ்வின் அங்கம்.!

உணர்ந்து நீயும் ஏற்றுக் கொண்டால் நீதான் தங்கம்.! அறிவாய் மனிதா அறிவாய்... அறிவால் நாளும் தெளிவாய்.!!!.


- கவிஞர் பொன். பனகல் பொன்னையா.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%