கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்; ஸ்டாலின் திறந்தார்; நொய்யல், நாவாய் அருங்காட்சியகத்துக்கு அடிக்கல்

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்; ஸ்டாலின் திறந்தார்; நொய்யல், நாவாய் அருங்காட்சியகத்துக்கு அடிக்கல்



சென்னை, பிப். 


சிவகங்கை மாவட்டத்தில் ரூ.24.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.2.75 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மனோரா நினைவுச் சின்னத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் புதுபொலிவுடன் கூடிய கட்டட முகப்பு விளக்குகளின் செயல்பாடுகள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


தலைமைச் செயலகத்தில், தொல்லியல் துறை சார்பில் நடந்தது நிகழ்ச்சி. சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில், 65,380 சதுர அடியில் இரண்டு காட்சிகூடங்களுடன் 24 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்.


தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திர ராஜபட்டினம் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மனோரா நினைவுச் சின்னத்தில் 2.75 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் புதுபொலிவுடன் அமைக்கப்பட்டுள்ள கட்டட முகப்பு விளக்குகள்,


மேலும், ஈரோடு மாவட்டம், கருமாண்டி செல்லிபாளையத்தில் 33.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் 34.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நாவாய் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.


தமிழ்நாடு 15 லட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு மேற்கொண்ட அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது.


கீழடி அகழாய்வு, தொல்லிய லாளர்கள் இடையே மட்டுமின்றி உலகத் தமிழர்கள் இடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பொருநை ஆற்றங்கரை நாகரிகம், 3200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை சிவகளை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற நெல் உமியினை பகுப்பாய்வு செய்ததன் வாயிலாக உறுதி செய்ய முடிகிறது. மேலும், சிவகளை அகழாய்வில் கிடைத்த அறிவியல் காலக்கணக்கீடுகள் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பம் தமிழ் நிலப் பரப்பில் அறிமுகமாகியுள்ளது என்பதை உறுதிசெய்தன.


2017 முதல் 2025 வரை ஏழு பருவங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு 13,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. 2026-ஆம் ஆண்டுக்கான பதினொன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.


கீழடியின் முக்கியத்துவம்


கீழடியில் 2018-–ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணம், மியாமி நகரத்தில் அமைந்துள்ள, பீட்டா பகுப்பாய்வு ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்பட்டு பெறப்பட்ட காலக்கணக்கீடு ஆய்வறிக்கையின்படி வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம் 2600 ஆண்டுகள் பழைமயானது எனத் தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் நகரமயமாதல் கி.மு.3-ஆம் நூற்றாண்டளவில்தான் தொடங்கியது என்ற கருதுகோள்களுக்கு பதிலளிக்கும் வகையில் கி.மு.6-ஆம் நூற்றாண்டில் வடஇந்தியாவின் கங்கை சமவெளிப் பகுதியில் நகரமயமாதல் தொடங்கியகாலகட்டத்திலேயே தமிழகத்திலும் நகரமயமாதல் தொடங்கியுள்ளது என்பது தெளிவு.


இதுவரை தமிழி எழுத்து வடிவத்தின் காலம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு என அழகன்குளம், கொடுமணல், பொருந்தல் ஆகிய அகழாய்வுகளின்படி கருதப்பட்டு வந்தது. தற்போதைய கீழடி ஆய்வுகளின்படி தமிழியின் காலகட்டம் கி,மு. 6-ம் நூற்றாண்டு என இன்னும் ஒரு நூற்றாண்டு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின் மரபினை பெருமையுடனும் பெருமிதத்துடனும் புரிந்து கொள்வதற்காகவும், தற்போதைய அறிவை மேலும் மெருகூட்டவும், தெளிவுபடுத்தவும் அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வைகை நதிக்கரை நாகரிகத்தின் சான்றுகளை அறிவியல் அடிப்படையில் வெளிச்சமிட்டு காட்டும் வகையில் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன.


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் கீழடி கிராமம் மதுரைக்கு தென்கிழக்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி தளமானது அக்கிராமத்தின் பசுமை நிறைந்த தென்னத்தோப்பினுள் அமையப்பெற்றுள்ளது.


கீழடி திறந்தவெளி அருங்கட்சியகத்திற்கான கட்டுமானப் பணிகளை 23.01.2025 அன்று முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.


தொல்பொருள் உலகில்


சிறந்த எடுத்துக்காட்டு


கீழடி தொல்லியல் தளம், தமிழ்நாட்டின் தொல்பொருள் உலகில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதன் மூலம் நாம் பழங்கால வாழ்க்கை முறை, பண்பாடு மற்றும் சமூக அமைப்புகளைப் பற்றி புதிய புரிதல் பெற்று, தொல்லியல் ஆய்வுகளில் முக்கியமான வளர்ச்சியை நோக்கி முன்னேறக்கூடியதாக இருக்கின்றது. மேலும் இவ்வரலாற்று சிறப்பு மிக்க தொல்லியல் அகழாய்வுத் தளம் மக்கள் பார்வைக்காக சர்வதேச தரத்தில் திறந்தவெளி அருங்காட்சியமாக அமைக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%