பூஜையறையைவிட்டு வெளிப்பட்டார் பண்ணையார் பரமசிவம். பண்ணை யாரு க்காக ஹாலில் காத்திருந்த வேலையாள் கண்ணா யிரம், " ஐயா ! யாரோ தரகர் கந்தசாமின்னு ஒருத்தர் பட்டணத்திலேர்ந்து வந்திருக்கார். அனுப்ப லாங்களா ?" பவ்யமாகக் கேட்டான்.
தரகர் கந்தசாமியைப் பற்றி கேள்வி ப்பட்டதில்லை. அதோடு தரகு தொ ழில் செய்பவன் தன்னை ஏன் பார்க் கவே ண்டும் !மனத்தில் குழப்பம் தோன்ற " சரி. வரச் சொல் !" எனக் கூறிவிட்டு ஈ.ஸி. சேரில்சாய்ந்து கொண்டார் பரமசிவம்.
கண்ணாயிரம் சென்ற சில வினாடிக்களுக்குள் கந்தசாமி உள்ளே நுழைந்தார்.
" ஐயா..வணக்கம்ங்க ! " கக்கத்தில் ஒரு பையை வைத்துக்கொண்டு இருகரம் கூப்பியபடி வந்தவரைப் பார்த்தார் பரமசிவம். தூய வெண் ணிற அரைக்கைச்சட்டையும் வேஷ்டியும் அணிந்திரு ந்தார் கந்தசாமி. நெற்றி யில் விபூதி பூசி நடுவில் ஒரு ரூபா அளவுக்கு குங்குமம் இட்டிருந்தார். பார்க்க சிவனடியார் போல் இருந்தார்.
" வாங்க. உட்காருங்க !" பரமசிவம் சொல்ல எதிரில் இருந்த இருக்கை யில் அமர்ந்துகொண்டார் கந்தசாமி.
" ஐயா ! உங்கக்கிட்ட ரகசியமான விஷ
யம் பேசவேண்டும். பக்கத்தில யாரும்
ஒட்டு கேட்கமாட்டாங்களே ?" பெரிய பீடிகையுடன் கந்தசாமி ஆரம்பிக்க பரமசிவத்திற்கு என்னவோப் போலி ருந்தது !
" சும்மா சொல்லுங்க ! யாரும் இல்ல..."
" ஐயா ! என் பேரு கந்தசாமி. நான் பார்க்கறது தரகு தொழில்." சிறிது தயங்கிவிட்டு தொடர்ந்தார் " உங்கப் பண்ணையில வேலை செய்யுற பெருமாள் ஒருஅனாதைதானே ?"
கோபத்துடன் இடைமறித்த பரமசிவம்,
" மன்னிக்கணும். நாங்க அவனுக்கு பக்கபலமா இருக்கோம். பெருமாள் அநாதை இல்லை !" என்று கடு கடுத்
தார்.
" இருக்கட்டும்ங்க ! ஆனால் அவனு க்கு சித்த ஸ்வாதீனமில் லேன்னு கேள்வி ! இல்லீங்களா ?"
" சரி. உங்களுக்கு என்ன வேண்டும்? சீக்கிரம் கேட்டுவிட்டு கிளம்பற வழி யைப் பாருங்க !" சினத்துடன் கூறி னார் பரமசிவம்.
" கோபப்படாதீங்க...சரி. நேராகவே கே
ட்குறேன்...அந்த பெருமாள் எனக்கு
வேணும். வேணுமானால் ஐம்பதா யிரம்கொடுக்கறேன். என்ன சொல்றீங்க ?"
" ஹலோ...இது என்ன ஆடு மாடு விற்கிற மாதிரின்னு நினைப்பா ! மனுஷனு க்குப்போய் விலை பேசறீர். சாரி. பெருமாளை அனுப்ப முடியாது !" பரமசிவம் ஆக்ரோஷத்துடன் கூறினார்.
கந்தசாமி உதடுகளில் விஷமச் சிரிப்பு!
" ஐயா ! நீங்க பெரியவங்க. இப்படி முகத்தில் அறையற மாதிரிசொல்லக் கூடாது.அந்த அரைலூசால உங்களு க்கு ஒரு பிரயோஜனமுமில்ல. சரி. விலையை டபுளா க்கறேன். ஒரு லட்சம் சம்ம தமா ?"
" மிஸ்டர் ! ஒருகோடி கொடுத்தாலும்
பெருமாளை உங்களோடு அனுப்பமுடி
யாது. நீங்க கிளம்பலாம்." பரமசிவம் கை வாசல் நோக்கி நீட்ட கந்தசாமிக்கு வேறு வழி தெரியவில்லை. எழுந்து சில அடி தூரம் சென்றவர் மறுபடியும் திரும்பி வந்தார்.
" ஐயா ! இதுதான் உங்க முடிவா ?"
" ஆமாம் ! நீங்க புறப்படலாம் !"
" அப்போ நான் சொல்றத நல்லாக் கேட்டுக்குங்க. உங்களுக்கு ஒருவாரம் டைம் தரேன். அதாவது அடுத்த திங்கட்கிழ மைக்குள் உங்கக் கிட்டேர் ந்து சாதகமான பதிலை எதிர்பார்க் குறேன். இல்லைன்னா போலீஸ் துணையோடு அந்தப்பயலை நான் ஓட்டிக்கிட்டுப் போவே ன்.இது உறுதி !" சவால் விட்ட கந்த சாமி விடு விடு வென்று புறப்ப ட்டுச் செல்ல ஆடிப் போனார் பரம சிவம்.
இதுவரை ஒரு போலீஸ் கேஸ் பார்த்தது இல்லை. கோர்ட் படி ஏறியதுமில்லை.யாரோ ஒருவன் வந்து ஒரு அநாதைப்பயலுக்காக மல்லுக் கட்டுகிறான்.அதுவும் பணம் ஒருலட்சம் வேறு தருகி றேன் என்கி றான். இவனைக் கூட்டிக்கிட்டுப் போய் என்ன செய்வான் ?
பரமசிவம் மூளையில் பொறி தட்டியது.ஒருவேளை அதற்காக இருக்குமோ. இருக்கலாம். பிச்சை க்காரர்கள், அநாதைப் பயல்கள் இதற்காகவென்றே இருக்கிறார்கள் ! அவர்களுக்கு சப்போர்ட் செய்ய யாரும் இல்லாத காரணத்தால் அவர்கள் நிலைமை மோசமாக இருக்கிறது.
என்ன ஆனாலும் பெருமாளை இழக்கக்கூடாது என்ற திடமான முடிவு பரமசிவம் மனத்தில் எழுந்தது.
ஐந்து வருஷம் முன்னால் எங்கிரு ந்தோவந்த பெருமாள் நேராக பண்ணைத் தோட்டத்துக்குச் சென்றான். டிரவு சரும் கிழிந்த சட்டையும் அணிந் திருந்தான். பண்ணையில் ஓய்வெ டுத்துக் கொண் டிருந்தபரம சிவம் படு த்திருந்த கட்டிலருகில் போய் நிற்க , எதேச்சையாக கண் திறந்து பார்த்த பரமசிவம் திடுக்கி ட்டார்.
சடாரென எழுந்து உட்கார்ந்தவர், "எல
நீ யாருடா ? இங்க எங்க வந்தே ?"
பரமசிவத்தை குறு குறுவென்று பா
ர்த்தபடி, , " என் பேரு பெரு மாள் !எனக்கு சோறு வேணும். தற்ரயா ?" என்றான்.
அவன் தோற்றம், நடவடிக்கைகள் வேறு தினுசாக இருக்க புரிந்து கொண்டார் பரமசிவம். நல்ல சிவந்த நிறத்தில் கவர்ச்சி குடிகொண் டிருந்தது அவனிடம் ! இப்படிப்பட்ட பையனுக்குப் போய சித்த சுவாதீ
னமா? நம்புவதற்கே கஷ்டமாயி ருந்தது.
அதன்பிறகு பெருமாள் அங்கேயே ஒட்டிக்கொண்டான். ஐந்துவருஷம் எந்தவிதத்தொல்லையுமில்லை.ஆனால் இன்று வந்த ஒரு புரோக்கர் வெடிகு ண்டை தயாராய் வைத்து ள்ளான்.
பரமசிவம் சென்னையில் இருக்கும் தன் மகன் சரவணனுக்கு ஃபோன் மூலம் நடந்ததை விலாவரியாகச் சொன் னார்.
அனைத்தையும் கேட்ட சரவணன், " நீங்கபயப்படாதீங்கப்பா ! அந்த தரகன் ஏதோஒரு கெட்ட நோக்கத்தோடுதான் பெருமாளை விலைக்கு கேட்குறான். நீங்க பெருமாளை இழக்காதீங்க. ஜாக்ரதையாப் பார்த்துக்குங்க ! ஏன்னா நம்மள நம்பி வந்தவன் ! " என்றான்.
ஒருவாரம் கழிந்தது. திங்கட்கிழமை
புலர்ந்தது. இரவு பூராவும் தூங்கா திருந்ததால் பரமசிவம் கண்கள் கோவை ப்பழமாகச் சிவந்திருந்தன. எரிச்சல் வேறு !
சொன்னமாதிரி தரகர் கந்தசாமி இன்
னும் கொஞ்சநேரத்தில் வரப்போ கிறான். அவனை துணிச்ச லோடு எதிர்கொள்ள வேண்டும் என மனசு நினைத்தாலும் தேகம் நடுங்கியது பரமசிவத்திற்கு.
வருவது வரட்டும் என எண்ணியவாறு
எழுந்து பல் துலக்கினார். சமையல்கா
ரர் தந்த காஃபியைப் பருகிவிட்டு அன்
றைய தமிழ் நாளிதழைக் கையில் எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தபடி நோட்டம் விட்டார். மூன்றாம் பக்க த்தில் வெளியான செய்தி பரமசி வத்திற்கு உற்சாகம் தந்தது !
சட்டவிரோதமாக செயல்பட்ட தர
கர் கந்தசாமி கைது செய்யப்பட்
டார். அநாதைகளை ஆசைவார்
தைகளில் மயக்கி கொண்டு
சென்று அவர்களை மயக்கமுறச்
செய்து , அவர்களிடமிருந்து சிறு
நீரகம், ஈரல், இதயம், கண், தோல்
இவற்றை களவாட ஏதுவாகியிருக்
கிறார். அதனால் கந்தசாமியை
போலீசார் சிறையில் அடைத்தனர்..
...............
செய்தியைப் படித்த பரமசிவம் நிம்மதிபெருமூச்சொன்று விட்டார்.
'பெருமாளை கொண்டு செல்ல நினைத்தாய். கடைசியில் அந்தப் பெருமாளே உன்னைக் கொண்டு போனார் ஜெயிலுக்கு ! எனக்கு கெடு வைத்தாய். ஆனால் அந்த ஆண்டவ னே உனக்குகெடு வைத்துவிட்டான்.'
பரமசிவன் மனதில் இருந்த கவலை
நீங்கியது.
..........................................
வி.கே.லக்ஷ்மிநாராயணன்