ஒற்றைக் காலில் நிற்கிறாய்
உணவுக் காகப் பார்க்கிறாய்
வற்றாக் குளத்தில் வாழ்கிறாய்
வயலில் எங்கும் சூழ்கிறாய்!
மீனை தவளை உண்கிறாய்
மிதக்கும் நீரைக் காண்கிறாய்
காண அழகைத் தருகிறாய்
கருத்தாய் இரையைப் பெறுகிறாய்!
எலியைக் கூடப் பிடிக்கிறாய்
ஏற்ற உணவாய் அடைகிறாய்
வலசை நன்கே போகிறாய்
வரிசை காட்டி மகிழ்கிறாய்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%