சட்டென எழுந்தால் தலை சுற்றுகிறதா… உங்கள் உடல் சொல்லும் ரகசியம் இதோ!

சட்டென எழுந்தால் தலை சுற்றுகிறதா… உங்கள் உடல் சொல்லும் ரகசியம் இதோ!


இன்றைய காலத்தில் அலுவலக வாழ்க்கை என்பது பெரும்பாலும் நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து கணினி முன் வேலை செய்வதோடு முடிகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது உடலுக்கு பெரிய சுமையாக மாறுகிறது. முதுகுவலி, கழுத்து வலி, உடல் எடை அதிகரிப்பு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் இதன் விளைவுகளாகத் தோன்றுகின்றன.


இதற்கு ஒரு எளிய, சுவாரஸ்யமான, சமீபத்தில் பேசப்படும் தீர்வுதான் Office Frogging.


Office Frogging என்றால் என்ன?


Frogging என்ற சொல் தவளையின் தாவுதலை நினைவூட்டுகிறது. அதைப் போலவே, Office Frogging என்பது நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதை தவிர்த்து, சிறிய இடைவெளியில் சிறிய உடற்பயிற்சி தாவல்கள் அல்லது ஸ்குவாட்ஸ் போன்ற அசைவுகளைச் செய்வது.


உதாரணமாக:


ஒவ்வொரு 45 நிமிடத்துக்கும் 10 முதல்15 ஸ்குவாட்ஸ் செய்வது


மேசையின் அருகே நின்று கால்களை மடக்கி நேராக நிற்பது


லிஃப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டில் ஏறுவது


சிறிய frog jump போல மடக்கி எழுவது


இவை அனைத்தும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.


Office Frogging செய்வது எப்படி?


Office Frogging முறையை மெதுவாகத் தொடங்குவது சிறந்தது. தினமும் 5 முதல் 10 ஸ்குவாட்ஸ் செய்து ஆரம்பித்து, உடல் பழகிய பிறகு எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்கலாம்.


ஒவ்வொரு மணி நேரத்துக்கும் எழுந்து நின்று சிறிய அசைவுகள் செய்ய அலாரம் அல்லது மொபைல் நினைவூட்டலை அமைத்துக் கொள்வது சிறந்தது.


முழங்கால் வலி, முதுகு பிரச்னை அல்லது பிற உடல்நலக் குறைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே இந்த அசைவுகளை செய்ய வேண்டும்.


சுலபமாகச் செய்யக்கூடிய அளவிலான அசைவுகளைத் தேர்வு செய்து, உடைக்கு ஏற்ற பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும். இதனுடன் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையும் இணைத்தால், உடல் சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் மேலும் மேம்படும்.


யாருக்கு இது மிகவும் உதவும்?


IT துறையில் பணிபுரிபவர்கள், நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள், Work from Home முறையில் இருப்பவர்கள் மற்றும் தினசரி உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்கள் ஆகியோருக்கு Office Frogging மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினசரி வேலை நேரத்திலேயே சிறிய உடல் அசைவுகளைச் சேர்ப்பதன் மூலம், சோர்வு குறைந்து, உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%