நம் வாழ்வில் எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ என்று அது நடந்தே தீரும்
அதை யாராலும் தடுக்க முடியாது
அதை எத்தனை முயற்சி செய்தாலும் நடத்த முடியாது அப்படிப்பட்ட விதியையும் மாற்றும் சக்தி கொண்ட சிவபெருமான் ஆலயம் ஆந்திர மாநிலம் சித்தூர் கார் வேட்டி நகரில் சதாசிவ சுவாமியாக அருள்பாலிக்கிறார்
சிறிதும் இல்லாத பெரிய அளவில் இல்லாத ஒரு கோவில் பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த கோவிலுக்கு பல மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர் கோவிலுக்குள் நுழைந்ததும் சிவனும் பார்வதியும் நந்தி மீது அமர்ந்த கோலத்தில் உள்ள சிற்பம் நம்மை ஈர்க்கிறது அதைத் தொடர்ந்து உள்ளே சென்றால் சதாசிவ சுவாமியை தரிசிக்கலாம் அவரை உற்றுப் பார்த்தால் உங்கள் மனதிற்குள் நல்ல மாற்றம் நிகழும்
சௌந்தர்ய வள்ளி என்னும் பெயரில் அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது முதல் கடவுள் ஆன விநாயகர் முருகன் சன்னதிகள் உள்ளன நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிற்பம் ஒன்று உன்னத தத்துவத்தை விளக்குகிறது நிழல் கிரகங்களான ராகு கேதுக்கு இடையே பிரம்மா விஷ்ணு சிவபெருமானும் இரு பக்கத்தில் விநாயகர் முருகன் உள்ளனர். இலங்கையில் மட்டுமே இந்த அமைப்பில் சிலைகளை காணலாம் இங்கு வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும்
இந்த இரண்டும் இருந்தால் அதைவிட வேறு என்ன வேண்டும் சிவராத்திரி அன்று சதாசிவ சுவாமிகள் இடம் வேண்டிக் கொண்டால் வருவது வரட்டும் போவது போகட்டும் நமக்கென்று இருப்பது போதும் என்ற மன நிறைவு ஏற்படும்
திருத்தணியில் இருந்து புத்தூர் 33 கிலோமீட்டர் அங்கிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது. இங்கிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் காளகஸ்தி கோவில் உள்ளது அதையும் தரிசித்து விட்டு வரலாம்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?