news Breaking News
clock

சிலிண்டர் வெடித்து தாய் பலியான வழக்கு மகனுக்கு ரூ.23 லட்சம் நஷ்டஈடு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

சிலிண்டர் வெடித்து தாய் பலியான வழக்கு மகனுக்கு ரூ.23 லட்சம் நஷ்டஈடு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு



திருநெல்வேலி, பிப்.

- விகேபுரத்தில் கேஸ் சிலிண் டர் வெடித்து தாய் பலியான வழக்கில், பாதிக்கப்பட்ட மகனுக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.23 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்க புரம் வம்ப ளந்தான்பாறை தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சண்முகம் (52). கடந்த 2017 செப்டம் பர் 21ஆம் தேதி சண்முகம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப் போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர் தானாக கழன்று கீழே விழுந்தது. இதனால் சிலிண்டரில் இருந்து காஸ் கசிந்து வீடு முழுவதும் பரவியது. அதே நேரத்தில் மின்சார வாரியத்தின் மின் பகிர்மானத்தில் அதிக மின் அழுத்தம் உண்டானது. இதனால் மின் சுவிட்சில் இருந்து கிளம்பிய தீப்பொறி, கேஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்ததால் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இதில் வீடு இடிந்து தரைமட்டமானது. விபத்தில் படு காயம் அடைந்த சண்முகம் சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தனது தாயின் மரணத்திற்கும், வீடு இடிந்ததற்கும் கேஸ் நிறுவனம், அதன் விநியோகஸ்தர் மற்றும் மின்வாரியத்தின் சேவை குறைபாடே காரணம் என சண்முகத்தின் மகன் கார்த்திக் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர், வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை மாவட்ட கூடுதல் நுகர்வோர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார். இவ் வழக்கை மாவட்ட கூடுதல் நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத் தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் விசாரித்தனர். அப்போது கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்த நிறுவ னம் மற்றும் மின்வாரியம் தரப்பில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கார்த்திக் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நஷ்ட ஈடு வழங்க ஆணை யம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு தொடர்ந்த 2019ம் ஆண்டு முதல் 9 சதவிகித வட்டியையும் சேர்த்து வழங்கவும் ஆணையிட்டது. அதனுடன் வழக்கு செல வுக்காக ரூ.10 ஆயிரமும் சேர்த்து வட்டியு டன் மொத்தம் ரூ.23,89,165யை 45 நாட்க ளுக்குள் வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் உத்தரவிட்டார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News