விவசாய நகைக்கடனில் கட்டாய இன்சூரன்ஸ் ஐஓபி வங்கிக்கு எதிராக விவசாயிகள் சங்கம் புகார்
தூத்துக்குடி, பிப்.
– தூத்துக்குடி மாவட்டத் தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) கிளைகளில் விவசாய நகைக்கடன் வழங்கும் போது, விவசா யிகளிடம் கட்டாயமாக இன்சூரன்ஸ் / விபத்து காப்பீ ட்டு பாலிசிகள் இணைத்து ரூ.800 முதல் ரூ.3000 வரை பிடித்தம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செய லாளர் பா.புவி ராஜ், மாவட்ட தலைவர் ராகவன் ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் முகாமின் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். அந்த மனுவில், ஆயி ரக்கணக்கான விவசாயிகள் ஐஓபி வங்கியின் வாடிக்கை யாளர்களாக இருந்து வருவ தாகவும், நகைக்கடன் பெறும் போது வங்கி அதி காரிகள் இன்சூரன்ஸ் பாலிசிகளை கட்டா யப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய நகைக்கடன் பெற இன்சூரன்ஸ் அவசியம் என அரசு அல்லது ரிசர்வ் வங்கி இதுவரை எந்த உத்த ரவும் பிறப்பிக்கவில்லை என்றும், இலக்குகளை (Target) நிறைவேற்றும் நோக்கில் வங்கி அதிகாரிகள் விவசாயிகளை அழுத்தம் கொடுத்து பாலிசிகளை வாங்க வற்புறுத்துகின்றனர் என்றும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கனவே பொருளா தார சிரமங்களில் உள்ள விவசாயிகளுக்கு இது கூடுதல் நிதிச்சுமையாக மாறியுள்ளது. விவசாயி களின் சேமிப்பு கணக்கு களில் இருந்து அவர்களின் சம்மதமின்றி தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ள தாகவும், இதனை ஆய்வு செய்தால் உண்மை வெளி வரும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கட்டாய இன் சூரன்ஸ் நடைமுறையை உடனடியாக நிறுத்தி, பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை சம்பந்தப் பட்ட விவசாயிகளின் கணக்குகளில் மீண்டும் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசா யிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் இத்தகைய விதிமீறல்கள் நடைபெறாத வகையில் வங்கி அதிகாரிகளுக்கு தெளிவான வழிகாட்டு தல்கள் வழங்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத் தப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?