news Breaking News
clock

வி.கே.புரத்தில் 14 பேரை கடித்து குதறிய தெரு நாய்

வி.கே.புரத்தில் 14 பேரை கடித்து குதறிய தெரு நாய்



திருநெல்வேலி, பிப்.

- நெல்லை மாவட்டம் வி. கே.புரம் நகராட்சியின் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக தெரு நாய் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று ஏராளமா னோரை கடித்து குதறிய சம்பவத்தில் நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதே. நேரத்தில் தெரு நாய்கள் வி.கே.புரம் நகர் பகுதிகளில் பள்ளிக் கூடங்கள் இருக்கும் இடங்களிலும், தெருக்களிலும் கூட்டம் கூட்டமாக திரிவது மட்டுமல்லாது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் துரத்தி சென்று கடித்து வருகின்றன. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அவர்கள் எந்தவித நட வடிக்கை யும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெருநாய் ஒன்று வெறித்தனமாக சுற்றித் திரிந்து 14 பேரை கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அய்யா கோவில் தெரு, பழைய போலீஸ் நிலையம் பகுதி களில் நடந்த இந்த சம்பவத்தில் 3 சிறு வர்கள் உட்பட மொத்தம் 14 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஜெசிந்தா, பிரேமா தனுசு வேல், பாலமதி,தீரான், மதன்குமார் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அம்பாசமுத்திரம் அரசு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் லேசான காயங்களுடன் முதலுதவி பெற்றுள்ளனர். அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து தெரு நாய் கடிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தெரு நாய்களை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரி களிடம் வலியுறுத்தியுள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News