களியக்காவிளை பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு சிபிஎம் உறுப்பினர் உள்பட 10 பேர் ஆட்சியரிடம் மனு

களியக்காவிளை பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு சிபிஎம் உறுப்பினர் உள்பட 10 பேர் ஆட்சியரிடம் மனு

களியக்காவிளை பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு சிபிஎம் உறுப்பினர் உள்பட 10 பேர் ஆட்சியரிடம் மனு


குழித்துறை, பிப்.

- களியக்காவிளை பேரூ ராட்சியில் மாதந்தோறும் மன்ற கூட்டம் நடத்தாமல் காலம் தாழ்த்திவரும் பேரூ ராட்சித் தலைவரால் பேரூ ராட்சியில் வளர்ச்சிப் பணி கள் மற்றும் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள் ளது. இப் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களியக்காவிளை பேரூ ராட்சி உறுப்பினரும், கட்சி யின் களியக்காவிளை - பளு கல் வட்டாரக்குழு உறுப்பின ருமான ஏ. வின்சென்ட் தலை மையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஏ.வின்சென்ட் தலைமை யில் பேரூராட்சி துணைத் தலைவர் த. பென்னட்ராஜ், வார்டு உறுப்பினர்கள் நிஷா, குணசீலன், எம். பாபு, டெல்பின் ஜமீலா, எஸ். சுனிதா, டி. உமா மகேஸ்வரி, எஸ். விஜயகுமாரி மற்றும் நியமன உறுப்பினர் கே. கதி ரேஷ் உள்ளிட்ட 10 உறுப்பி னர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்தி ருப்பதாவது: இப் பேரூராட்சியில் துணைத் தலைவர் மற்றும் பெரும்பான்மை உறுப்பினர் கள் கொடுக்கும் தீர்மானங்க ளை மன்ற தலைவர் கூட்ட பொருளில் கொண்டு வரா மல் புறக்கணிப்பு செய்து வருவதுடன் மாதந்தோறும் மன்ற கூட்டமும் நடத்தாமல் செயல்பட்டு வருகிறார். மேலும் ஒற்றாமரம் பகுதி யில் செயல்பட்டு வரும் பேரூராட்சிக்கு சொந்தமான வாகன எடை மேடை மாதந் தோறும் பேரூராட்சிக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இழப்பை சரிசெய்ய எடை மேடையை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கவும், பேரூராட்சி துணைத் தலை வர் தலைமையில் மன்ற கூட்டம் நடத்தவும், மன்ற தலைவர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%