news Breaking News
clock

பேச்சிப்பாறை பழங்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையான மின் இணைப்பு வழங்க அனுமதி

பேச்சிப்பாறை பழங்குடி மக்களின் நீண்ட கால கோரிக்கையான மின் இணைப்பு வழங்க அனுமதி



அருமனை, பிப்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பா றை ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வசிக்கின்ற பழங்குடி மலைவாழ் கிராம மக்களின் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. பேச்சிப்பாறை ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி பாதுகாக்கப் பட்ட வனப்பகுதியாக இருப்பதாலும் ,பல்லுயிர் சரணாலயம் என்பதாலும் அப்பகுதி மக்களு க்கு மின் இணைப்பு வழங்குவதில் தடங்கல் இருந்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரத்திற்கு பின் முதல்முறை யாக மலை கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. அப்போதய துணை முதல்வராக இருந்த மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் தொடர்ச்சி யாக பல இடங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் மின் இணைப்புக்கு மனு அளித்தும் எந்த பயனும் இல்லாத ஒரு சூழ்நிலை இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது களப்பாறை, தின்னமூட்டு தேரி போன்ற பகுதிகளில் இருந்த 50க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்பு மக்களுக்கு மின் இணைப்பு வழங்க முதல் முறையாக கிராமசபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதை அடுத்து வனத்துறை அதிகாரி கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மரங்கள் மற்றும் விலங்குகளு க்கு பாதிப்பு இல்லை என்று கண்டறியப் பட்டு 51 வீடுகளுக்கு மலைவாழ்குடியி ருப்புக்கு மின் இணைப்பு வழங்க வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் களப்பாரை, தின்ன மூட்டு, தேரி மக்களுக்கு முதல்முறையாக மின்சா ரம் கிடைப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தங்களின் நீண்ட கால போராட்டத்திற்கு விடிவு வந்தது என மகிழ்ந்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News