சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரி விழா திருத்தேர் பவனி

சீர்காழி தென்பாதி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரி விழா திருத்தேர் பவனி



சீர்காழி , பிப் , 17 - 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரம் தென்பாதி தாலுக்கா அலுவலகம் எதிரில் நீதிமன்ற சாலையில் பரம்பரை தனியார் ஆலயமாகவும் புராதனமாயும் விளங்குகின்ற ராஜராஜேஸ்வரி என்கின்ற அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மையின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகலில் திருத்தேர் பவனி , காவடி ஊர்வலம் , அபிஷேக ஆராதனை, மாலையில் மாவிளக்கு ஏற்றுதல் , இரவு அம்பாள் யாளி வாகனத்தில் அமர்ந்து பேச்சி ரூபம் எனும் ஆகம வேஷத்துடன் அக்னி கொப்பரை கரகம் முதலானதுடன் முக்கிய வீதி வழி சென்று சீர்காழி நகர மயானம் அடைந்து திருவிளையாடல் முடிந்து மறுநாள் அதிகாலை ஆலயம் திரும்புதல் நிகழ்ச்சி நடை பெற்றது .

 விழா ஏற்பாடுகளை ஆலய உரிமை மற்றும் பரம்பரை டிரஸ்டி ஸ்தானீகம் எம்.ஆர் ஜீவானந்தம் செய்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%